Kanyakumari

News March 24, 2025

கோடை விடுமுறை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

தமிழகத்தில் கோடை விடுமுறையில் ரயில்களில் தேவைக்கு ஏற்ப மூன்று பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் குமரி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் காத்திருப்பு எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 24, 2025

உலக காசநோய் தினம் விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

image

உலக காசநோய் தினம் மார்ச் 24ஆம் தேதி வருடம்தோறும் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காசநோய் ஒழிப்பு தீபம் ஏந்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நாகர்கோவிலில் கோணம் அரசு கல்லூரியிலிருந்து தொடங்கி கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது. முடிவில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா காசநோய் விழிப்புணர்வு தீபத்தினை ஏற்றி தொடர் ஓட்டத்தினை முடித்து வைத்தார்.

News March 24, 2025

குமரியில் ஆவின் பால் கொள்முதல் 6000 லிட்டராக சரிவு!

image

குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மாடுகளுக்கு பால் சுரக்கும் தன்மை குறைந்து, 9000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 6000 லிட்டராக குறைந்துள்ளது. மீதமுள்ள பாலை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

News March 24, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 24) 28.80 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.90அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 30 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 32 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 24, 2025

நாகர்கோவில்: பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி மயக்கம்!

image

நாகர்கோவில் அருகே நேற்று முன்தினம்(மார்ச் 22) ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குளச்சல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 குழந்தைகளும் இதில் அடங்குவர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவில் உடலுக்கு ஒவ்வாமை தரக்கூடிய ஏதாவது கலந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

News March 24, 2025

குமரி மாவட்டத்தின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 24) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கோரி, கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு 103வது நாளாக தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது#காலை 10:30 மணிக்கு தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி கொடுப்பதை கண்டித்து ராணி தோட்டம் TNSTC தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் CITU ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News March 23, 2025

குமரி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 218 பேர் மீது வழக்கு

image

குமரி மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பொது இடத்தில் மது அருந்தியதாக 218 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.*நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்

News March 23, 2025

ஓடும் ரயிலில் தாக்குதல்: ரயில்வே ஊழியர்கள் மீது வழக்கு

image

குமரியில் இருந்து நேற்று மாலை திப்ருகருக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் படுக்கை சார்ந்த பொருட்கள் விநியோகிக்கும் தீப் கொகைய், அயான் கொனாய் ஆகியோருக்கும் சமையல் பிரிவில் பணிபுரியும் தபான் மண்டல், கைப் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவர்களுக்குள் கைகலப்பும் நடந்தது. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் நேற்று இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 23, 2025

கஞ்சா வியாபாரி  குண்டர் சட்டத்தில் கைது

image

பனச்சமூடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமி (40). கஞ்சா வியாபாரியான இவர் மீது அருமனை களியக்காவிளை, பழுகல் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி ஸ்டாலின் பரிந்துரை செய்தார். அதன் பெயரில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

News March 23, 2025

குமரியில் மண் சோறு உண்டால் பிள்ளை வரம் கிடைக்கும்

image

குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் புகழ்வாய்ந்தது. இங்கு பகவதி அம்மன் சுயம்புவாக புற்றுவடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்கு மண் சோறு உண்டால் பிள்ளை வரம் கிடைக்கும். தாலி காணிக்கை செலுத்தினால் திருமண வரம் கிட்டும் என்பதும் நம்பிக்கை. 27 தீபங்கள் ஏற்றி, அம்மனை 9 முறை சுற்றி வந்தால் தோஷங்கள் யாவும் நீங்கும். நைவேத்தியம் செய்து வழிபட்டால் மண்டையிடி குணமாகும்,

error: Content is protected !!