India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டம், இடைக்கோடு வலியவிளை வீட்டை சேர்ந்தவர் ஷீபா (38). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணுவ வீரரான ஷைன் (33) விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு ஷீபாவின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஷீபா கொடுத்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் ராணுவ வீரரை கைது செய்தனர்.

மணவாளக்குறிச்சியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ரம்யா. இவர் வயிறு வலி இருப்பதாக ராஜேஷிடம் கூறியுள்ளார். உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்தனர். இருப்பினும் வயிறு வலி குறையாததால் நாகர்கோவில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு செல்லும் வழியில் ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று தக்கலை காவல் நிலையம் முன் கனிம வள லாரி மோதி சிறுமி ஹாட்லின் அபினா உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் படி, குமரி–கேரளா எல்லையில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணவாளக்குறிச்சி அருகே முட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் பவுலின் மேரி மற்றும் அவரது தாயார் தெரசம்மாள் ஆகியோரை 2022-ம் ஆண்டு சுத்தியல் மற்றும் தேய்ப்பு பெட்டியால் அடித்து கொலை செய்து நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அமல் சுமன் (39 ) என்பவருக்கு நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றம் இன்று இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

குமரி மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

Sorry, no posts matched your criteria.