Kanyakumari

News March 22, 2025

இரணியலில் ரயிலை கவிழ்க்க சதி – 3 தனிப் படைகள் அமைப்பு

image

இரணியல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 5 கற்கள் வைக்கப்பட்டு ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. இது தொடர்பாக ரயில்வே போலீசாரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் இருந்து உயர் அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினார்கள் இந்த நிலையில் ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்களை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

News March 22, 2025

தாம்பரம் – குமரி ரமலான் சிறப்பு ரயில் அறிவிப்பு!

image

தாம்பரம் – குமரி இடையே ரமலான் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. தாம்பரத்திலிருந்து குமரிக்கு(வண்டி எண் – 06037) மார்ச் 28 அன்று மாலை 7 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை குமரி 8:00 மணி வந்தடையும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து(வண்டி எண் 06038) மார்ச் 31 அன்று குமரியில் இருந்து இரவு 8:30க்கு கிளம்பி மறுநாள் காலை 8:55க்கு தாம்பரம் சென்றடையும்.

News March 22, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 22) 28.74அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.90அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 61 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 22, 2025

மனோ தங்கராஜ் எம்எல்ஏவின் இன்றைய நிகழ்ச்சிகள் விவரம்

image

#காலை 10.30 மணிக்கு திருவட்டார் – திருவரம்பு சாலைப் பணியை தொடங்கி வைக்கிறார்.#11.15 மணிக்கு குலசேகரம் – அரசமூடு விளையாட்டு மைதான பணிகளை ஆய்வு செய்கிறார்.#மதியம் 12.15 மணிக்கு பேச்சிப்பாறை – கோதையாறு சாலை சீரமைப்புப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.#மாலை 6 மணிக்கு கீழ்குளம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

News March 22, 2025

குமரியில் ரூ.20 ஆயிரத்தை எட்டிய ரப்பர் விலை!

image

குமரி மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. இங்குள்ள ரப்பர் கேரளா உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் ரப்பர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்து, நேற்று(மார்ச் 21) 100 கிலோ ரப்பர் ரூ.20 ஆயிரத்தை எட்டியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.19 ஆயிரத்து 700 மற்றும் 19 ஆயிரத்து 800 போன்ற விலையில் இருந்த ரப்பர் நேற்று ரூ.20,000 ஆனது.

News March 22, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 22) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கேட்டு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு 101 வது நாளாக ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்.#காலை 10:30 மணிக்கு கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வள்ள விளை சந்திப்பில் மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News March 21, 2025

குமரியில் 700 குளங்களில் மண் எடுக்க நடவடிக்கை!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 700 குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு அரசுகளில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். நீரை பெருக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

News March 21, 2025

குமரி எரிவாயு நுகர்வோருக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

குமரி மாவட்ட ஆட்சியரகத்தில் 24.03.2025 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எரிவாயு நிறுவனங்களின் மேலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே, எரிவாயு நுகர்வோர்கள் இதில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

News March 21, 2025

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குமரி வருகை

image

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை மார்ச்27-ந்தேதி கன்னியாகுமரி வருகிறார். அவர் அகில பாரத கோ சேவாபவுண்டேஷன் சார்பில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நடக்கும் பசு பாதுகாப்பு மகா யாத்திரையின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார். இதை யொட்டி அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

News March 21, 2025

கன்னியாகுமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(மார்ச் 21) கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், குமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மட்டும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 25ஆம் தேதி சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல். SHARE IT.

error: Content is protected !!