India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுசீந்திரம் குளம், பறக்கை குளம், பால்குளம், தேரூர் குளம், மாணிக்கம் ஆகிய குளங்கள் பறவைகள் பாதுகாப்பு குளங்களாக உள்ளன. இக்குளங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. இந்த குளங்களில் அளவுக்கு அதிகமாக தாமரைகள் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த தாமரைகளை பறவைகளுக்கு இடையூறாக பறிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறும்பனையைச் சேர்ந்தவர் ஜான் சுஜின் பிரதீப் (33). இவர் இருசக்கர வாகனத்தில் கருங்கல் – தேங்காய்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது கீழ்குளம் பகுதியில் இவரது டூவிலர் மீது டெம்போ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுக்கடை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்களான சுசீந்திரம் ஷோபனா ராஜ், களியக்காவிளை கதிரசன், மார்த்தாண்டம் மாகின் மற்றும் சார்லஸ், கட்டுப்பாட்டு அறை சங்கர குமார், கடையால மூடு தாஸ், தக்கலை முருகன், தபால் பிரிவு கண்காணிப்பாளர் உதயகுமாரி ஆகியோர் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அவர்களை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் சால்வை போர்த்தி கௌரவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 122 மையங்களில் இந்த தேர்வு இன்று நடைபெற்றது. மொத்தம் 22, 208 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 22,001 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 207 பேர் தேர்வு எழுதவில்லை என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,’ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கும் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை இத்திட்டத்தில் 13,000 பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என கூறியுள்ளார். *நல்ல வாய்பை மிஸ் பண்ணிடாதீங்க* ஷேர்
வளரும் வேளாண்மை – கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா சார்பில் வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் ஆண்டு மலர் வெளியீடு நிகழ்ச்சி ஏப்ரல் 1ஆம் தேதி நாகர்கோவில் கஸ்தூரிபா மாதர் சங்கத்தில் நடைபெறுகிறது. ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜ்குமார் தலைமை வகிக்கிறார். நிர்வாக குழு உறுப்பினர் லட்சுமி தங்கம், கவுன்சில் உறுப்பினர் அனிதா நடராஜன், ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குநர் நிஜமுதீன் கண்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன் ராதாகிருஷ்ணன் ‘X’ கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இன்று(மார்ச் 28) அவர் தகவல் வெளியிட்டுள்ளார். அதனை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதா கிருஷ்ணனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 28) 28.93 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.70 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 51 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
#இன்று(மார்ச் 28) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கோரி கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு 106வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு வன உரிமைகள் சட்டம் வென்றெடுக்கும் காணி மக்களின் 4வது மாநில மாநாடு பேச்சிப் பாறையில் நடைபெறுகிறது.
குமரி மாவட்ட விளவங்கோடு முன்னாள் எம்எல்ஏவும், தமிழக பாஜக நிர்வாகியுமான விஜயதாரணி கரூரில் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து போட்டியிட்டால் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும். திமுக மீது அதிருப்தி தெரிவித்து வரும் த.வெ.க எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் ஆட்சியில் பங்கு பெறலாம். இல்லையென்றால் ஓட்டுகளை பிரிக்கும் கட்சியாக இருக்கும் என கூறினார்.
Sorry, no posts matched your criteria.