India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைதேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தோவாளை ஊராட்சி அலுவலகம் அருகே மலர்களால் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
குமரி: காட்டுபுதூர் பகுதியை சேர்ந்த இனிய சுதன் என்பவர் வேலைக்கு செல்லும் வழியில் ஒருவர் பைக்கில் லிப்ட் கேட்டு பயணம் செய்துள்ளார். பைக் பாதி தூரம் சென்றவுடன் அந்த நபர் இனிய சுதனை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் சீயோன் புரத்தை சேர்ந்த வினோத் என்பது தெரியவந்தது. அவரை போலிசார் கைது செய்தனர்.
குமரி, தக்கலை அருகே உள்ள வண்டாவிளையை சேர்ந்தவர் ஹரிதாஸ்(58), கொத்தனார். இவரது மனைவி லதா(48). ஹரிதாஸ் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும்(ஏப்.8) ஹரிதாஸ் பிரச்னை செய்யவே, ஆத்திரமடைந்த லதா வெந்நீரை அவர் மீது ஊற்றியுள்ளார். இதில் காயமடைந்த ஹரிதாஸ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தக்கலை போலீசார் விசாரிக்கின்றனர்.
கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று(ஏப்.8) பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பட்டுள்ளதால் அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றுநீருடன் கடல் நீர் கலந்ததால் பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு காதலர்களை பிரிக்கும் நோக்கில், காதலனை, குமரி கடற்கரை பகுதிக்கு சமாதானம் பேச வரவழைத்த காதலி வீட்டை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நாகர்கோவில் 2வது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி ஹஷன் தீர்ப்பளித்துள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பாக பசலியான் நசரேத் போட்டியிடுகிறார். இவர் குமரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்து வருகிறார். இந்த நிலையில் குமரி மாவட்ட புரட்சி பாரதம் கட்சி தங்கள் முழு ஆதரவை அதிமுக கூட்டணிக்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து அதன் தலைவர் தங்கம் டேனியல் பசலியான் நசரேத் அவர்களை நேற்று(ஏப்.8) நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மக்களவைத் தொகுதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்கு பெட்டியில் வாக்கு சீட்டு கொடுத்து ஓட்டு பெற்று வருகின்றனர். அதன்படி, மாவடத்தில் 2,546 மாற்றுத்திறனாளிகளும், முதியோர் 3,982 பேரும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
குமரி: பளுகல் சோதனை சாவடியில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போலீஸ் ஏட்டு பெனடிக் ராஜ் நிலைதடுமாறி ஓடையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவரை
சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொல்லங்கோடு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் கோட்டார் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில், நேற்று(ஏப்.7) போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, PWD ரோட்டில் வைத்து வேர் கிளம்பி ஊரை சேர்ந்த ரகு ராஜ் என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது, அவரிடம் 3-1/2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.