India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ஐந்து போலீஸ் சப் டிவிஷனில் 15 ரோந்து படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் நேற்று தெரிவித்தார்.
குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக தமிழக முதல்வருக்கு நாகர்கோவில் எம்.எல்.ஏ M.R. காந்தி மனு அளித்தார். அதில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மணவாளகுறிச்சி I.R.E.L நிறுவனத்தை பாதுகாக்கவும், இதன் செயல்பாட்டை முடக்கும் விதத்தில் நடத்தப்படும் போராட்டத்தை தடுக்கவும், தமிழக அரசால் வழங்கப்பட்ட தாது மணல் எடுக்கும் செயலை செயல்படுத்தவும் கருத்து கேட்டு கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
குமரி மாவட்டம் கொட்டாரம் மேல தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பன் என்ற பகவதி(70). பழ வியாபாரியான இவர் இன்று சந்தையில் பழம் வாங்கிவிட்டு சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். கொட்டாரம் அருகே உள்ள ரவுண்டான சந்திப்பில் சென்று கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி இவர் மீது மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் சக்கரம் ஏறி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
கல்லன்குழி புலவன் புலவன் விளையை சேர்ந்த ராஜேந்திரன், மனைவி தங்க லீலா (57). இவர் வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு முண்ட விளையில் வைத்து கருங்கல் செல்லும் பஸ்சில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ் சக்கரம் அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தக்கலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்திருந்தனர். உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் சதீஷ் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆசாரிபள்ளம் மருத்துவமனையிலிருந்து தப்பித்து ஓடிய கைதி சதிஷ் – யை இன்று தனிப்படை போலீசாரால் வள்ளியூரில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வரும் 74,875 பயனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வூதியம் பெறும் பயனாளர்கள் ரேஷன் கடை மூலமாகவும், ரேஷன் அட்டை கிடைக்காதவர்கள் கிராம நிர்வாக அலுவலத்திலும் இவற்றை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை 2000 ஆண்டு அமைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு அதன் 25 ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதனை வெளி விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக குமரி மாவட்டம் வரும் அவர் கன்னியாகுமரியில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.
வடகிழக்கு மழை தீவிரமடைந்து குமரி மாவட்டத்தில் 5 நாட்கள் தொடர்ந்து மழை பெய்ததில் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 2040 குளங்களில் 1230 குளங்கள் நிரம்பி உள்ளன. 550 குளங்கள் 50 சதவீதம் தண்ணீருடன் காணப்படுகின்றன என அதிகாரிகள் கூறினர். குளங்கள் நிரம்பியதால் தேரூர், பறக்கை, புத்தேரி உட்பட குளத்து பாசனத்தை நம்பியிருக்கும் மாவட்டத்தின் பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று(அக்.29) காலை 9.30 மணிக்கு தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஆற்றூர் மூவாற்று முகம் மரியா ஆயுர்வேத கல்லூரி, காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறைத் திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, 10.30 மணி ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்தும் நூதன போராட்டம் நடைபெற உள்ளது.
சுசீந்திரம் பகுதியில் திருமணமான 6 மாதத்தில் மாமியார் கொடுமைப்படுத்தியதாக சுருதி (24) என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மாமியார் செண்பகவல்லி (50) போலீசாரின் விசாரணைக்கு பயந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.