Kanyakumari

News April 22, 2024

குமரி: முருகன் கோயிலில் நிலாச்சோறு விருந்து

image

குமரி மாவட்டம் முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி நாளான நாளை(ஏப்.23) காலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30க்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கலச பூஜை, வேல்முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியன நடக்கிறது. வெள்ளி அங்கி சார்த்தி சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து லட்சார்ச்சனை, அன்னதானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நிலாச்சோறு விருந்து தொடங்குகிறது. 

News April 22, 2024

பேச்சிப்பாறை அருகே மரம் விழுந்து கார் சேதம்

image

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை உள்ளிட்ட மலை பகுதிகளில் நேற்று(ஏப்.21) மாலை பெய்த பலத்த மழையில், சமத்துவபுரம் பகுதியில் நின்ற பலாமரம் முறிந்து விழுந்தது. அப்போது, இடலாக்குடியில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கார் மீது மரம் விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த பெண்கள் உள்பட 4 பேரும் உயிர் தப்பினர். அந்த பகுதியில் இருந்தவர்கள் சேர்ந்து காரில் இருந்தவர்களை மீட்டனர்.

News April 20, 2024

போதையில் பாட்டியை கொலை செய்து பேரன் 

image

திருவட்டார் சாரூரை சேர்ந்தவர் தாசம்மாள் வயது( 80). இவரது மகன் புஷ்பராஜ் இறந்ததால் பேரன் அஜித் (23) தாசம்மாளுடன் வசித்து வந்தான். பெயின்ட் கடை ஊழியர் அஜித் நேற்று தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட்  சொத்தை தன் பெயருக்கு எழுதி கேட்டு போதையில் தாசம்மாளை பிடித்து தள்ளியதில் அவர் தலையில் அடிபட்டு இறந்து போனார். இதில் பயந்த அஜித் வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். 

News April 20, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News April 20, 2024

குமரியில் 65.46% வாக்குகள் பதிவு

image

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று(ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. அந்த வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக,
• நாகர்கோவில் – 63.29%
• குளச்சல் – 64.05%
• கன்னியாகுமரி – 69.59%
• கிள்ளியூர் – 62.93%
• விளவங்கோடு – 65.40%
• பத்மநாபபுரம் – 66.98%
என மாவட்ட அளவில் மொத்தம் 65.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

News April 19, 2024

ஆர்வமுடன் வாக்களித்த குமரி கலெக்டர்

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் இன்று காலை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருசடி புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

News April 19, 2024

அமைச்சர் மனோ தங்கராஜ் வாக்களிப்பு

image

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இந்த வகையில் கருங்கல் அருகே மூசாரி அரசு மேல்நிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று காலை வாக்களித்தார்.

News April 19, 2024

குடும்பத்துடன் ஜனநாயக கடமை ஆற்றிய குமரி கலெக்டர்

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதர் தனது குடும்பத்துடன் நாகர்கோவில் குருசடி பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்தி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

News April 19, 2024

குமரி: விஜய் வசந்த் எம்பி வாக்களித்தார்

image

குமரி மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக  தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் காலை முதலே வாக்களிக்க ஆர்வமுடன் வருகை தந்துள்ளனர். அந்த வகையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங். வேட்பாளரான விஜய் வசந்த் எம் பி. இன்று காலை அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

News April 19, 2024

குமரி: தனியார் விடுதியில் மதுபாட்டில்கள் பறிமுதல்

image

கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தனியார் விடுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து விடுதியை சோதனை செய்து அங்கு இருந்த 550 மது பாட்டில்களை(750ml) பறிமுதல் செய்த கன்னியாகுமரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.