India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகர்கோவில் அருகே தெற்குசூரங்குடி வைகுண்டர் நற்பணி மன்றத்தின் 25ஆம் ஆண்டு விழா நேற்று(ஜன.27) நடைபெற்றது. விழாவில் பழவிளை கிடங்கன்கரை விளை அரசு நடுநிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன் ராமபிரதாப் ஒரு மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் ஒப்பித்தார்.அந்த மாணவரின் திறமையை பாராட்டி அவருக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமார் ஊக்கத் தொகையும், கேடயமும் வழங்கி பாராட்டினார்.

இன்று காலை 10 மணிக்கு கூட்டுறவு மீதான மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதை கண்டித்தும் கூட்டுறவு வங்கிகளில் தொழில்நுட்பம் மேம்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வலியுறுத்தியும் இந்தியன் வங்கி ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிகிறார்கள். மாலை மணி வில்லுக்குறி சந்திப்பில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறும்.

குமரி மாவட்டத்தில் தற்போது தென்னைமரம் நோய்த்தாக்குதலுக்குள்ளாகி வருவதால் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் சராசரியாக ரூ.50 விற்ற தேங்காய் விலை தற்போது மொத்த விற்பனை கடைகளில் ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.80 விலையில் விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் சிறு ஓட்டல்களில் தேங்காய் சட்னியும் நிறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, அவர்கள் நாளை 28-ம்தேதி காலை 09.30 மணிக்கு வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெறும் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்கள். இதில் துறை ரீதியான அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர

கன்னியாகுமரி மாவட்டத்தில் மது போதையில் ஓட்டுநர்கள் வாகனங்களை ஓட்டி செல்வதாக புகார்கள் வந்துள்ளது.இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவில் தைப்பெரும் திருவிழா அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது. 3ஆம் தேதி காலை 6:30 மணி முதல் 7.30 மணிக்குள் திருக்கொடியேற்று நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜை வழிபாடு போன்றவைகள் நடைபெறுகிறது. 11ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று(ஜன.27) தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், கருப்புக்கோட்டை கைலாசத்து மகாதேவா் கோயிலில், கோதை கிராமம் காசி விஸ்வநாதர் கோவில், களியங்காடு சிவன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், போட்டியோடு ஷம்பு மகாதேவர் கோவில் உட்பட பல கோவில்களில் பிரதோஷ நிகழ்வு நடைபெற உள்ளது.

#இன்று(ஜன.27) காலை 10 மணிக்கு சங்க அங்கீகார தேர்தலை நடத்தகோரி கோணம் உட்பட 6 இடங்களில் சுமை தூக்குவோர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்.#காலை 10 மணிக்கு ஓய்வூதியம், குடியிருப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாகுமரி ரவுண்டானா அருகில் வீட்டு வேலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.#காலை 11 மணிக்கு குளச்சல் நகராட்சி அலுவலகம் முன் CPIML லிபரேஷன் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று (ஜன.26) கூறியதாவது; கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் 57 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாகன விபத்துகளை தடுக்க போலீசாருடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும். 18 வயதுக்கு குறைந்த சிறார்களுக்கு வாகனம் ஓட்ட பெற்றோர் அனுமதிக்க கூடாது என்றார்.

குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான RoboFest-Gujarat 4.0 சாம்பியன்ஷிப்பில் அளவில் நான்காம் இடம் வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், மேலும் அவர் பிறந்து வளர்ந்த ஊரான தோவாளை மண்ணிற்கு பெருமை சேர்ந்திருக்கும் பச்சை ஐயப்பன் என்பவரின் மகன் செல்வனுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Sorry, no posts matched your criteria.