Kanyakumari

News May 2, 2024

குமரியில் கவுன்சிலர் பைக் எரிப்பு

image

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கொட்டாரம் பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம்(ஏப்.30) தனது பைக்கை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, பைக் எரிந்த நிலையில் இருந்தது. முன்விரோதத்தில் பைக்கை எரித்ததாக ஹரிஹரன் என்பவரை கன்னியாகுமரி போலீசார் தேடி வருகின்றனர்.

News May 2, 2024

5 நாளில் 32,616 பேர் வருகை!

image

கோடை விடுமுறை சீசனை ஒட்டி சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 5 நாளில் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 32 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்று பார்வையிட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

News May 2, 2024

தக்கலை பகுதியில் நாளை மின்தடை!

image

குமரி மாவட்டம் தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில், வெள்ளிச்சந்தை மின்விநியோக பிரிவிற்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை பீடர் உயர்அழுத்த மின் பாதையில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நாளை(மே 3) நடைபெறுகிறது. இதனால் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநயினார் குறிச்சி, மூங்கில்விளை, கல்படி, காருபாறை, ஞாறோடு, மணவிளை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தகவல்.

News May 2, 2024

பூதப்பாண்டி பகுதியில் மின்தடை ரத்து!

image

பூதப்பாண்டி மற்றும் அழகியபாண்டியபுரம் மின்விநியோகப் பிரிவிற்குட்பட்ட இறச்சகுளம், கடுக்கரை, தாழக்குடி ஆகிய உயர் அழுத்த மின்பாதைகளில் இன்று மற்றும் 4, 6ம் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பூதப்பாண்டி பகுதியில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த மின்தடை ரத்து செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

image

கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் கேரளா எல்லையில் அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் பறவை காய்ச்சல் கண்காணிப்பு பணிக்கான அனைத்து துறை ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் இன்று நடைபெற்றது.

News May 1, 2024

திருவட்டார் பகுதியில் மின் தடை அறிவிப்பு

image

திருவட்டார் மின் விநியோகத்துக்கு உட்பட்ட அருமனை பீடர் கீழ் வரும் தேமானூர், தோட்டவாரம், மூவாற்றுமுகம் சுற்றுவட்டார கிராமங்களில், நாளை(மே 2) மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் மற்றும் அவசர பராமரிப்பு  பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  குலசேகரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர்  தெரிவித்துள்ளார்.

News May 1, 2024

குமரி: 10 பேரை பதம் பார்த்த தெரு நாய்கள்!

image

குமரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப நாட்களாக ஏராளமான தெரு நாய்கள் சாலையோரங்களில் கூட்டமாக வலம் வருகின்றன. இவற்றில் சில சாலையோரம் செல்லும் பொதுமக்களை கடிக்கின்றன. இந்நிலையில் நேற்று(மே 1) ஒரே நாளில் 3 இடங்களில் 10க்கும் பேரை நாய்கள் கடித்து குதறியது. இதில் ராஜஸ்தானில் இருந்து சுற்றுலா வந்த 3 பேரும் அடக்கம். எனவே இதனை கட்டுப்படுத்த பேருராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News April 30, 2024

குடிநீர் வழங்குவது குறித்து ஆட்சியர் ஆலோசனை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீராக குடிநீர் வழங்கப்படுவதை துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிபடுத்த வேண்டும். மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

News April 30, 2024

பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி மோசடி

image

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் மேரி கிறிசிபா. இவரது கணவர் பாஸ்கர். இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறை பயன்படுத்தி உனக்கு விவகாரத்து வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தைகள் கூறி கணவரின் உறவினர்களான ஷீபா, பால்சன் ஆகிய இருவரும் ரூ.13 லட்சம் பெற்றதாக அப்பெண் நாகர்கோவிலில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

News April 30, 2024

உரிமைகளை வென்றெடுத்த வெற்றி நாள் – எம்பி

image

கன்னியாகுமரி எம்.பி. விஜய்வசந்த் மே தின  வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,  “உழைக்கும் மக்களின் பெருமையை எடுத்துக் கூறும் இந்த மே தினத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்; தங்கள் உடலை வருத்தி உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த வெற்றி நாள் இது; தேசத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் போற்ற பட வேண்டியவர்கள்” என்றார்.