India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி அருகே கொல்லங்கோடு சூழால் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று(மே 3) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டாரஸ் லாரி ஒன்று எம்-சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு கேரளம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில், ஜல்லிகள் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பெற்று எம்-சாண்ட் கடத்தியது தெரியவந்தது. லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் லாரியை பறிமுதல் செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
குமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவிற்கான கால்கோள் நடும் விழா இன்று காலை பகவதி அம்மன் கோயிலில் நடைப்பெற்றது. இதில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் கோட்டார் போலீஸ் நிலையம் அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமித் ஆல்ட்ரின் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பார்வதிபுரம் செல்லும் மினி பஸ் ஒன்று வந்தது. இதன் டிரைவர் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கினார். இதனை கண்ட போலீசார், மினி பஸ்சை நிறுத்தி டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதால், வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை கவனமுடன் பராமரிக்க வேண்டிய கடமை அவற்றை வளர்ப்பவர்களுக்கு உள்ளது; கால்நடைகளுக்கு நாள்தோறும் 4 முதல் 5 முறை குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். அப்போதுதான் கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும்” என கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே தந்தையை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்து கைதான மகள் ஆர்த்தியுடன் 2 ஏட்டுகளுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்த்தியின் பிரச்னைகளை 2 போலீசாரும் தீர்த்து வைத்ததாகவும், இந்த கொலை வழக்கை நீர்த்துப் போக அவர்கள் முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட காவல்துறையினர் மேற்படி ஏட்டுகளிடம் விசாரித்து வருகின்றனர்.
மங்களூரு சென்ட்ரல் டூ நாகர்கோவில் பரசுராம் எக்ஸ்பிரஸ்(16649), மங்களூருவில் இருந்து வழக்கமாக காலை 5.05 மணிக்கு புறப்படும் நிலையில் மே 3,5 தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாக 5.35 மணிக்கு புறப்படும். அதே போன்று, மங்களூருவில் இருந்து மே 7,11,22,25,29 மற்றும் ஜூன் 5,8 தேதிகளில் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக காலை 6.35 மணிக்கு புறப்படும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி – பணகுடி ரயில்வே தண்டவாளத்தில் நேற்று(மே 2) காலை மிளா ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது. நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் மிளாவை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட போலீஸில் முதிர்ந்த நிலையில் கழிவு
செய்யப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலத்தில் விடப்படுகிறது.
வரும் 16.05.2024 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில், மறவன்குடியிருப்பு காவல் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் நடைபெறும். விருப்பம்
உள்ளவர்கள் 16.05.2024 அன்று ரூ.1000- செலுத்தி ஏலத்தில்எ பங்கேற்கலாம் என மாவட்ட காவல் துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படாமல் தடுக்க புகார், தகவலை பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்களை தமிழ்நாடு குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை வெளியிட்டது. துறையை 18005995950 என்ற எண்ணிலும், திருநெல்வேலி சரக டிஎஸ்பியை 8300070283, குமரி மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை 9498120504, சப்- இன்ஸ்பெக்டரை 9498122246, 9498133960 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.02) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.