India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்(1996), தென்னிந்தியாவின் முதல் பாஜக எம்எல்ஏவுமான வேலாயுதம்(73) இன்று(மே 7) காலை இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் நாளை(மே 9)காலை 10:30 மணிக்கு அவரின் சொந்த ஊரான வில்லுக்குறி, கருப்புக்கோட்டில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலாயுதம் மறைவுக்கு குமரி பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவட்டார் மின் விநியோகத்துக்கு உட்பட சுருளகோடு பீடரில் நாளை(மே 9) மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் வேர்க்கிளம்பி ஏ.பி.சுவிடச் முதல் மாறாங்கோணம் , கல்லங்குழி , வாழவிளை , புலவன் விளை, மார்த்தாண்டன் விளை, ஒட்டலி விளை மற்றும் அதனை சுற்றியுள்ள துணை கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாகி பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் அளவு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அனேக இடங்களில் வரும் வியாழன் (மே-9) முதல் கோடை மழைக்காலம் துவங்க வாய்ப்பு உள்ளது. மேலும் தினசரி பிற்பகல் நேரத்தில் மாலையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியில் அமைந்துள்ளது லெமூர் பீச். இங்கு, நேற்று(மே 6) திருச்சியில் இருந்து சுற்றுலா வந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து இங்கு பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கடற்கரையை மூட உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று இந்த கடற்கரை எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டு மூடப்பட்டது.
குமரி மாவட்டம் முக்கடல் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர்கள் அனீஸ்(24), சுபின்(21). இவர்கள் நேற்று முன்தினம்(மே 5) பூதப்பாண்டி அருகே மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, சுற்றுலா வேன் ஒன்று இவர்களது பைக் மீது மோதியது. படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று(மே 6) உயிரிழந்தனர். பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிந்து வேன் டிரைவர் சுரேஷ் குமாரை கைது செய்தனர்.
குமரி, ராஜாக்கமங்கலம் அருகே லெமூர் கடற்கரையில், திருச்சியில் இருந்து சுற்றுலா வந்த தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் கடல் அலையில் சிக்கிய நிலையில், 2 மாணவிகள், 3 மாணவர்கள் உயிரிழந்தனர். தஞ்சையை சேர்ந்த சாருகவி(24), நெய்வேலியை சேர்ந்த காயத்ரி(25), ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ்(24), திண்டுக்கலை சேர்ந்த ப்ரவீன் (23), குமரியை சேர்ந்த சர்வதர்ஷித் (23) ஆகிய மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மலக்கவுண்டன் பாளையம் மகாராஜா காலனியை சேர்ந்த ஷிபு வர்க்கீஸ் என்பவரின் மகன் சுபின் வர்க்கீஸ்(20). இவர் திருவட்டார் அருகே மாத்தாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்தவர், இன்று மாலை 4 மணிக்கு பரளியார் பாயும் அருவிக்கரை தடுப்ணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவட்டாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் கடல் அலையில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, குமரி கடற்கரை பகுதிகளில் மேலும் இயல்பை விட 1.5 மீ அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கடல் தகவல் சேவைகளுக்கான தேசிய மையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.