Kanyakumari

News January 11, 2026

குமரி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

குமரி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News January 11, 2026

குமரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 11, 2026

குமரி கலங்கரை விளக்கத்தை 67,000 பேர் பார்வையிட்டனர்

image

கன்னியாகுமரி பஸ் நிலையம் செல்லும் வழியில் கலங்கரை விளக்கம் உள்ளது. 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இது இயங்கி வருகிறது. இந்த கலங்கரை விளக்கத்தை கடந்த ஆண்டு (2025) மட்டும் 67 ஆயிரத்து 792 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இதில் 59,099 பெரியவர்களும், 8544 சிறியவர்கள் பார்வையிட்டு உள்ளனர். மேலும், வெளிநாட்டினர் 149 பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

திருநங்கை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அன்று சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய குமரி மாவட்ட திருநங்கை ஒருவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கத்துடன், சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்படுகிறது. எனவே, விருப்பமுள்ள திருநங்கைகள் http://awards.tn.gov.in என்ற
இணையதளத்தில் பிப்.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 11, 2026

குமரி: மயங்கி விழுந்து மீனவர் பலி

image

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் பகுதி மீன்பிடித் தொழிலாளி வில்லியம்(70). இவர் நேற்று காலை 40 மீனவர்களுடன் சேர்ந்து கரைமடி வலையை கரையில் இழுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மணவாளாக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். 

News January 11, 2026

குமரியை சேர்ந்தவர் போலந்து நாட்டில் உயிரிழப்பு

image

திருவட்டார் – கூற்றவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ராஜதாஸ் (42). போலந்து நாட்டில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவருடன் வேலை செய்த தொழிலாளி ஒருவர் ராஜதாஸின் சகோதரரை  செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ராஜதாஸ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறினார். இதையடுத்து அவரது உடலை ஊருக்கு கொண்டு வர உதவுமாறு அவரது குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

News January 11, 2026

குமரி: ரூ.1000 வரலையா? இங்க புகார் பண்ணுங்க!

image

குமரி மக்களே, மகளிர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு<> க்ளிக்<<>> செய்து பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆவணங்களை பதிவேற்றம் செய்து புகார் அளியுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 11, 2026

குமரி: ஆசிரியைக்கு ஆபாச செய்தி அனுப்பியவர் கைது..!

image

அருமனை பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது WhatsApp, Instagramஐ.டிக்கு பல எண்களில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும் போலி Instagram ஐ.டி உருவாக்கி அவருக்கு ஆபாச செய்தி அனுப்பி மிரட்டலும் வந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பைங்குளத்தை சேர்ந்த அருள்லிங்கம் என்பவரை நேற்று கைது செய்தனர்.

News January 11, 2026

குமரி: டெம்போ மோதி போலீஸ் ஏட்டு பலி..!

image

நாகர்கோவில் கிறிஸ்து நகரை சேர்ந்தவர் யூஜின் கிராஸ். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். ஜன.4 அன்று சாலையில் நடை பயிற்சியில் இருந்தபோது பின்னால் வந்த டெம்போ இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த யூஜின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.10) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

குமரி: திருமணம் ஆகாத விரக்தியில் பெண் தற்கொலை

image

நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தை சேர்ந்தவர் 33வயது பெண். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஏக்கத்தில் இருந்து வந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று (ஜன.10) காலை அவரது பெற்றோர் இதை பார்த்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கோட்டார் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். (தற்கொலை தடுப்பு உதவி எண்: 104)

error: Content is protected !!