India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 7 மாத பெண் குழந்தை நேற்று இரவு தாயின் கம்மலில் தொங்கிக் கொண்டிருந்த டாலரை விழுங்கிவிட்டது. இந்த டாலர் குழந்தையின் உணவு குழாய் மூச்சுக் குழாய் சந்திக்கக்கூடிய இடத்தில் சிக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டுவரப்பட்டது. இன்று காலை எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு டாலர் அகற்றப்பட்டது.
சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் நாளை (நவ 12) காலை 7.00 மணிக்கு சிற்றார் அணை சுற்றுலா வளர்ச்சி திட்ட மேம்பாட்டு பணிகளையும், காலை 8.00 மணிக்கு கடையால் சுற்றுலா படகுத் துறையையும், காலை 8.45 மணிக்கு திற்பரப்பு நீர்வீழ்ச்சி திட்டப் பணிகளையும், காலை 9.30 மணிக்கு மாத்தூர் தொட்டில் பாலத்தையும், காலை 11.00 மணிக்கு முட்டம் கடற்கரை மற்றும் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சந்தோஷ் கோப்பை 2024-2025 கால்பந்து அணி கேப்டனாக கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை மீனவ கிராமத்தைச் சார்ந்த லிஜோ தேர்வாகியுள்ளார். அணியின் கேப்டன்களாக தேர்வாகியுள்ள 3 பேரில் பாண்டியன், அஜித் ஆகியோருடன் தேர்வாகியுள்ள இவர் கேரளாவின் திருவிதாங்கூர் ராயல்ஸ், போர்சா கொச்சி, கல்கத்தாவின் மேற்கு வங்காளம் எப்சி, சென்னை எப்.சி, போன்ற அணிகளுக்காகவும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சிகள் தினமான 01.11.2024 நாளன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டத்தினை 23.11.2024 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11.00 மணி அளவில் நடத்திட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் 23ஆம் தேதி நடைபெறும் என்று ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“குமரி மாவட்டத்தில் 2024-வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் மிக வேகமாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளை வேடிக்கை பார்க்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம்; குறிப்பாக தங்களது குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்பக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நாளை திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சிற்றாறு உட்பட மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தொடர்ந்து, மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் சுற்றுலாத் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் சாலையில் HELMET அணியாமல், கல்லூரி பெண்கள் முன்பாக உயரக இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் பிடித்தனர். முடியை சீராக வெட்ட வைத்து காவல் நிலையத்திற்கு வரவழைத்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும் அவருக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தோவாளை பூ மார்க்கெட்டில் நேற்றைய பூக்கள் விலை விவரம்: அரளிப்பூ கிலோ ரூ.100, பிச்சி ரூ.300 மல்லிகை ரூ.900, கனகாம்பரம் ரூ.800, வாடாமல்லி ரூ.60, சிவப்பு கேந்தி ரூ.65, சம்பங்கி ரூ.50, முல்லை ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.130, கோழிப்பூ ரூ.40, மஞ்சள் கேந்தி ரூ.60, துளசி ரூ.30, 100 தாமரை ரூ500, மருக்கொழுந்து ரூ.120, கொழுந்து ரூ120, பச்சை ரூ.8 விலையிலும் விற்பனையானது.
Sorry, no posts matched your criteria.