India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடியில் 7 செ.மீட்டரும், கொட்டாரம் பகுதியில் 5 செ.மீட்டரும், சிவலோகம் சித்தாறு-2 பகுதியில் 4 செ.மீட்டரும், நாகர்கோயில், காளியல்,பேச்சிப்பாறை, கன்னியாகுமரி, மாம்பழதுறையாறு ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
குமரி மாவட்டத்தில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் தாழ்வான மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளான கம்பளம், மீனாட்சி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று(மே 16) மாநகர ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார்.
குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் அபிசன்(26), மீன்பிடி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம்(மே 15) குளச்சல் டாஸ்மாக்கில் மது அருந்தும்போது, செல்போனில் சத்தமாக பேசியுள்ளார். அருகில் இருந்த இருவர் மெதுவாக பேச கூறியதை அடுத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியே வந்த அபிசனை சிலர் தாக்கி செல்போனையும் உடைத்துவிட்டு தப்பியுள்ளனர். குளச்சல் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று(மே 17), 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 10.07, 10. ஈ அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.04 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 47.02 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 0.2 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.5 அடி நீரும் இருப்பு உள்ளது.
தமிழக – கேரள எல்லை பகுதியான ஆறுகாணி அருகே கன்னனூர்(கூட்டப்பு) பகுதியில் வைத்து நேற்று முன்தினம் இரவு போதை ஆசாமிகள் 3 பேர் அந்த சாலை வழியாக வாகனங்களில் சென்ற பலரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் அன்றே கைதான நிலையில் நேற்று(மே 16) மீதியுள்ள இருவரையும் வெள்ளறடை காவல்நிலைய அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல் அணையிலிருந்து கிராம புற பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், நாவல்காடு மற்றும் புத்தேரி ஆகிய கிராமங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று இரவு முதல் முக்கடல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இன்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலையோரப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கட்டில் 42 அடி நீரையும், பெருஞ்சாணி அணையில் 70 அடி நீரையும் தேக்கி வைக்க பொதுப்பணித்துறைக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். இதனால் நாளை பெரும்பாலும் அணையின் மறுகால் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் கவுன்சிலர்களை மக்கள் பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் கவுன்சிலர்களுக்கு கொலை மிரட்டல் விட்ட ரவுடி பிபின் பிரியன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பஞ்சாயத்து துணை தலைவர், கவுன்சிலர்கள் இன்று புகார் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்க தவறினால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
ஆவேசம் மலையாள படத்தில் ரங்கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பகத் பாசில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது கன்னியாகுமரி காவல்துறை ஆவேசம் பட பகத்பாசில் படத்துடன் பொதுமக்கள் ஆன்லைன் மோசடியில் மாட்டிக் கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். இந்த மீம்ஸ் இணைய தளங்களில் வைரலாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மே.16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.