Kanyakumari

News May 18, 2024

குமரி மாவட்டத்திற்கு மழை

image

குமரி மாவட்டத்தில் இன்று (மே.18) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் குமரியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

குமரி மாணவி அசத்தல் 

image

மருதூர்குறிச்சியைச் சேர்ந்தவர் எட்வின்ஜோஸ் மகள்
ஏஞ்சலின் லிபிகா. ஒன்றரை வயதில் நூறு சதவீத கண்பார்வை இழந்த இவர், +2 பொதுதேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தனியார் பள்ளியில் படித்தார். இவர் மாணவர்கள் மத்தியில் உதவியாளர் இன்றி தானே மடிக்கணினி மூலம் தேர்வு எழுதி 449 மதிப்பெண் பெற்றார். குமரி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற பார்வையற்ற மாணவியான இவரை பலரும் பாராட்டினர்.

News May 17, 2024

சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி

image

நாகர்கோவிலில் பல்வேறு இடங்களில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் பகலில் வியாபாரம் செய்து விட்டு இரவில் வடசேரி பேருந்து நிலையத்தில் தூங்குவார்கள். நேற்று இரவு பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் தூங்கி கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம் கோட்டார் பகுதியை சேர்ந்த வாலிபர் சில்மிஷம் செய்துள்ளார். சிறுமி சத்தம் போடவே அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றபோது பயணிகள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

News May 17, 2024

குமரி; தயார் நிலையில் மீட்பு படை

image

குமி மாட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து அணைகள் நிரம்பி வெள்ள பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.

News May 17, 2024

நாளை இளம்விஞ்ஞானி விருது வழங்கும் விழா

image

குமரி அறிவியல் பேரவையின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான இளம்விஞ்ஞானி விருது வழங்கும் விழா ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி அரங்கில் நாளை (18.5.24)) காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி  டாக்டர் முத்துநாயகம் இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முள்ளஞ்சேரி வேலையன் தலைமையில் குமரி அறிவியல் பேரவையினர் செய்து வருகின்றனர்.

News May 17, 2024

குமரி: மழைக்கு வாய்ப்பு!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கன்னியாகுமரியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

குமரி: மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 17, 2024

நாகர்கோவிலில் 9 போலீஸ் வாகனங்கள் ஏலம்.

image

குமரி மாவட்ட காவல் துறை சார்பில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பொது ஏலம் விடப்படும். அந்த வகையில் போலீசாரால் பயன் படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் கூடுதல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் நடைபெற்றது. ஏலத்தில் 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 9 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

News May 17, 2024

குமரிக்கு ஆரஞ்சு ALERT!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று(மே 16) ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது. இன்று காலை முதலே மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

குமரி: கொட்டிய கழிவுகளை அள்ளி சென்ற நபர்!

image

குமரி, மங்காடு ஊராட்சிக்கு, கீழ்கரிக்கல் பகுதியில் மே 11 அன்று இரவு டெம்போவில் கொண்டு வந்து கழிவுகளை கொட்டி சென்றனர். இது குறித்து நித்திரவிளை போலீசார் சிசிடிவியை ஆராய்ந்து, குப்பை கொட்டிச் சென்ற சங்குருட்டி பகுதியை சேர்ந்த டெம்போ உரிமையாளர் அஜீஸ் என்பவரை கண்டுபிடித்தனர். அதன்பின் ஊராட்சி நிர்வாகம் அஜீஸுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து கொட்டிய கழிவுகளை நேற்று(மே 16) அள்ளி செல்ல வைத்தனர்.