India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணி வரை குமரி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
குமரி, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு
ராஜ வைகுண்டபதி திருக்கோயிலில் வருடாந்திர திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிறப்பு நிகழ்ச்சியாக அய்யா வைகுண்டர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை முன்னிட்டு அய்யா வைகுண்டர் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அமைந்துள்ள கைதக்குழி அசம்பிளீஸ் ஆப் காட் திருச்சபையின் புதிய கட்டட திறப்பு விழா இன்று (மே-19) நடைபெற்றது. நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் தாரகை கத்பர்ட் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடன் சபை போதகர்கள், நிர்வாகிகள் இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வனம் மற்றும் நீர்நிலை சார்ந்த பகுதிகள் சூழியல் சுற்றுலா தலங்களாக உள்ளன. தற்போது குமரிமாவட்ட மலை பகுதிகளில் மழை தீவிரமாக பெய்து வருவதால் சூழியல் சுற்றுலா தலமான கீரிப்பாறை, காளிகேசம், கோதையாறு அருவி பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சூழியல் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் அறிவித்துள்ளார்.
முன்னாள் சமத்துவ மக்கள் கட்சி குமரி மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜின் இல்ல திருமண விழா நாகர்கோவில் அடுத்த தேரேக்கால் புதூர் கங்கா கிராண்ட் யுவர் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும் பிரபல நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடன் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் பாறையடி பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜீவ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (மே-18) ராஜேஷ் கீழ்குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது ராஜீவ் அவரை வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராஜேஷ் கொடுத்த புகாரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு:-
18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 10.82,10.92 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.72அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 48.82அடி நீரும், 25அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 0.1 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.5 அடி நீரும் இருப்பு உள்ளது.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று(மே-19) காலை 10 மணிக்கு 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லை, வள்ளியூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததில் தலை குப்புறக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் குமரி மாவட்டம் மருங்கூரை சேர்ந்த நவீன் என்பவர் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். மேலும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழையால் சாலையில் தண்ணீர் தேங்கிய நிலையில், வாகனம் நிலை தடுமாறி பாலத்தின் மீது மோதியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் சார்பில் கோடை விடுமுறையில் நாகர்கோவிலில் இருந்து திப்ருகாருக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வரும் மே24, ஜூன் 21, 28 ஆகிய தேதிகளில் இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் இந்த ரயில் ஜூன் 26 (ம) ஜூலை 3 ஆகிய தேதிகளில் திப்ருகாரில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் என அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.