India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மேலும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தபடி இன்று காலை முதல் சூறை காற்றுடன் கனமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இன்று படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
திருத்துவபுரத்தில் உள்ள குழித்துறை மறைமாவட்ட பேராலய விழா கடந்த 17 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 5 ஆம் திருவிழா நாளான நாளை மாலை சமய நல்லிணக்க
பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார் (ஜயாவழி சமயதலைவர் ), ஹெச். ஹாமிம் முஸ்தபா (கீற்று மாற்று ஊடகம், தக்கலை), லியோ பெலிக்ஸ், அருட்பணி ஏ. மரிய வின்சென்ட் (மணலிக்குழிவிளை பங்கு அருட்பணியாளர்) ஆகியோர் பேசுகின்றனர்.
கடந்த ஆண்டு பெய்த மழையினால் அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
நெசவாளர் காலனி, நங்காண்டி , தெரிசனங்கோப்பு சந்திப்பு, கொக்கல்விளாகம் சானல் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழையின் போது பாதிப்புகள் ஏற்படாமலிருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் புகுந்தால் முகாம்களில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கனமழை காரணமாக நாகர்கோவில் அருகே உள்ள மாநகராட்சி பாறைக்கால்மடம் பகுதி குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
திருவட்டார் அருகே சாரூர் பகுதியை சேர்ந்தவர் எபனேசர் (38) இவருடைய சித்தப்பா செல்வராஜ்(60) இவர்கள் இரண்டு பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று செல்வராஜின் வீட்டின் உள்ள மரக்கிளைகள் எபனேசர் வீட்டில் விழுந்ததால் தகராறு ஏற்பட்டு இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். காயத்துடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரியில் அமைந்துள்ளது விவேகானந்தர் நினைவகம். பிரபல சுற்றுத்தலமான இது வாவத்துறையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இரண்டு பாறைகளில் ஒன்றில் அமைந்துள்ளது. 1970 இல் கட்டப்பட்ட இந்த நினைவத்தில் உள்ள மண்டபம் பல்வேறு கட்டடக் கலைகளை உள்ளடக்கி கட்டப்பட்டது. விவேகானந்தர் இந்த பாறையை அடைந்து தியானம் செய்து ஞானம் பெற்றதாக பல வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன.
கன்னியாகுமரி காவல் துறை சார்பில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்கள், வியாபாரிகள், கார், ஆட்டோ ஓட்டுனர்கள், உருட்டு வண்டி வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் “கன்னியாகுமரியில் மர்மநபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என கேட்டுகொண்டார்.
இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நிருபர்களிடம் கூறியதாவது: குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பது மிகவும் தேவையானது. இதனால் தொழிற்சாலைகள் அதிகமாக வரும். அப்படி அதிக அளவிலான தொழிற் சாலைகள் வந்தால் வேலை வாய்ப்புகள் உருவாகும். அந்த பகுதியே வளர்ச்சி அடையும். இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக ககன்யான் அனுப்ப திட்டமிட்டு வருகின்றனர், முதலில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது என்றார்.
எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யவும், மறு கூட்டல் செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் பெறுவதற்கு மே 20-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று கடைசி நாள் ஆகும். அதன் பிறகே மறு கூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும். பிளஸ் 1-க்கு விடைத்தாள் நகல் பெற இன்று கடைசி நாள் ஆகும்.
Sorry, no posts matched your criteria.