Kanyakumari

News January 18, 2026

குமரி: தமிழ் தெரிந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை ரெடி

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 18, 2026

குமரி: நண்பனை அரிவாளால் வெட்டியவர் கைது

image

கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் சுபின். வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ராஜித் என்பவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனர். பின்னர் இருவரும் நண்பர்களான நிலையில் சுபினை, ராஜித் மது குடிக்க அழைத்துள்ளார். அங்கு சென்ற சுபினை, ராஜித் அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து சுபின் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து ராஜித்தை கைது செய்தனர்.

News January 18, 2026

குமரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

குமரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 18, 2026

குமரி: ரயில் நிலையத்தில் தவறி விழுந்தவர் பலி

image

கொல்லத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்றிரவு பயணிகள் ரயில் வந்தது. இந்த ரயிலில் வந்த முதியவர் ஒருவர் 2-வது பிளாட்பாரத்தில் இருந்து முதல் பிளாட்பாரத்திற்கு வருவதற்கு நடை மேம்பாலத்தின் படிக்கட்டில் ஏறிய போது தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவர் GH-ல் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவர் யார்? என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 18, 2026

குமரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

குமரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News January 18, 2026

குமரி: பைக் மோதி விபத்து

image

வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் ஜெசிலட்(42). இவர் பைக்கில் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் வெட்டுமணி பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஷாஜி நெல்சன் குமார் (58) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் இவரது பைக் மீது மோதியது. இதில் ஜெசிலட் மற்றும் அவரது 2 குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு GH-ல் சேர்த்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை.

News January 18, 2026

குமரியில் 13 பேர் கைது; SP அதிரடி உத்தரவு..!

image

திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு ஜன.16ல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக SP-க்கு புகார் வந்தது. இதையடுத்து SP உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை செய்தனர். இதில் நாகர்கோவில், தக்கலை, அழகப்பபுரம், குளச்சல், இரணியல் பகுதியில் சோதனை செய்து 291 மது பாட்டில்கள், 20 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 13 பேரை கைது செய்தனர்.

News January 18, 2026

குமரி மக்களே… இன்றே கடைசி.. உடனே CHECK பண்ணுங்க

image

குமரி மாவட்டத்தில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இடம்பெறதாவர்கள் மற்றும் விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் திருத்தம், புகைப்பட திருத்தம் போன்றவை மேற்கொள்ள இன்றே கடைசி நாள். இதற்கு முன் வெளியிட்ட பட்டியலில் உங்க பெயர் இருக்கானு <>தெரிஞ்சுக்கோங்க<<>>. மேலும், பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது தாலூகா அலுவலகத்தை அணுகலாம். SHARE IT

News January 18, 2026

குமரியில் அரசு ஊழியர் பரிதாப பலி..!

image

குருந்தன்கோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). இவர் ஆதி திராவிடர் நலத்துறை இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். தக்கலை தாலுகா அலுவலக குடியிருப்பில் தங்கி இருந்த இருவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தக்கலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 18, 2026

குமரி: டூவீலர் விபத்தில் இளைஞர் பலி..!

image

தடிகாரன்கோணம் குட்டி பொத்தையை சேர்ந்தவர் ராபின்சன் (26). இவர் மண் எடுக்கும் இயந்திர ஓட்டுநர் ஆவார். இவர் வேலை முடிந்து டூவீலரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது பில்லத்தூர் என்ற இடத்தில் வரும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிந்து விசாரணை.

error: Content is protected !!