India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் குளச்சல் முதல் கீழக்கரை வரையிலான தென் தமிழக கடற்கரை பகுதிகளில் கடல் அலை 0.3 மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை உயரக்கூடும். மேலும் கடலில் நீரோட்டம் அதிவேகத்தோடு இருக்கக்கூடும். எனவே கடற்கரையோரம் பேரலைகள் ஏற்படக்கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்கும் படி குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 11.84, 11.94 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.1அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 50.05அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 0.8 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.4 அடி நீரும் இருப்பு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சக்தி வாய்ந்த புனித தலமான காளிகேசம் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி பூஜை வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை மிதமான இடி மின்னலுடன் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
குமரி: கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் பால் சுதாகர்(50). இவர் சொந்த வேலை காரணமாக நேற்று தடிக்காரன் கோணத்திற்கு தன்னுடைய சொகுசு காரில் சென்று கொண்டு இருந்தார். அவர் தெரிசனங் கோப்பு அருகே வரும் போது எதிரே முருகன் என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் சேதமானது. காரில் இருந்த பால் சுதாகர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சி 3வது வார்டு பகுதியில் உள்ள மாறாங்குளத்தை தூர்வார ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் மாறாங்குளத்தில் இருந்து அளவுக்கு அதிகமான மண்ணை அள்ளி சென்று விட்டார். இதை எதிர்த்து 5-வது வார்டு பகுதியை சேர்ந்த தொழிலாளி சசி என்பவர் மண் அள்ளி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று (மே-20) தொடர் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார்.
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து விதி மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, சிலவாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 5 நாட்களில் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,274 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 2 நாட்களில் 172 பேர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.
குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நேற்று குமரி மாவட்டம் வருகை தந்தார். வருகை தந்த போக்குவரத்து துறை அமைச்சரை முன்னாள் தமிழக அமைச்சர் சுரேஷ் ராஜன் அன்புடன் வரவேற்றார். நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர் வரத்து அதிகமானது. தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகமானது. இந்த வகையில் திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட நீர்நிலைகளை குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு (மே.20 – 24) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 55 மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.