Kanyakumari

News January 21, 2026

குமரி : EB பில் நினைத்து கவலையா??

image

குமரி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE!

News January 21, 2026

குமரி: 2 மையங்களில் JEE மெயின் தேர்வு

image

JEE மெயின் தேர்வு இன்று (ஜன.21) தொடங்குகிறது. இந்த தேர்வினை குமரி ராமநாதிச்சன் புதூர் லார்டு ஜெகன்நாத் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் 986 பேரும், அஞ்சுகிராமம் ரோகிணி இன்ஜினியரிங் கல்லூரியில் 1448 பேரும் எழுதுகிறார்கள். மொத்தம் 2434 பேர் எழுதும் இந்த தேர்வானது இன்று தொடங்கி ஜன.22, 23, 24, 28, 29 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும், இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

News January 21, 2026

குமரி: முன்னாள் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

image

குமரி மாவட்டம், கருங்கல் அருகே எட்டணிவிளை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பால்ராஜ் (47). இவரது மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த 3 ஆண்டுகளாக இவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 21, 2026

குமரி: மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக எம்.எல்.ஏ அறிவிப்பு

image

விவசாயிகள் நலன் கருதி கருங்கல் பிரிவு கால்வாய் மற்றும் கிளை கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். இல்லை என்றால் வரும் வாரத்தில் விவசாயிகள், பொதுமக்களை ஒன்று திரட்டி பாலூரில் நீர்வளத்துறை அலுவலகம் முன்பு எனது தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

குமரி: தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 21, 2026

குமரி: தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 21, 2026

குமரி: குளத்தில் ஆண் சடலம் மீட்பு

image

கல்லன்குழி மண்விளையை சேர்ந்த தம்பதியர் செல்வின் ஜெபகுமார் – எல்சி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில் ஜன.18 அன்று வீட்டிலிருந்து சென்ற செல்வின் ஜெபகுமாரை காணவில்லை. இதையடுத்து நேற்று ஒட்டலிவிளை பகுதியில் உள்ள குளத்தில் இவர் இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

News January 21, 2026

நாகர்கோவில்: மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

நாகர்கோவில், மீனாட்சிபுரம் துணை மின்நிலையத்தில் இன்று (ஜன.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரிமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, ராமவர்மபுரம், சரலூர், இந்து கல்லூரி, வேதநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT.

News January 20, 2026

குமரி இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

(20.01.2026) கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

News January 20, 2026

குமரி: எல்லா CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்

image

குமரி மாவட்ட மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளை எளிதில் பெறலாம். பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!