India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேங்காய் ஓட்டில் கலைப்பொருட்கள் செய்த கன்னியாகுமரியை சேர்ந்த 2 பெண் கைவினைக் கலைஞர்களுக்கு, பூம்புகார் மாவட்ட ‘கைத்திறன் விருது’ வழங்கி தமிழக அரசு கௌரவித்தது. தேங்காய் ஓட்டில் கலைப்பொருட்கள் மற்றும் சமையலறை சாதனங்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வரும் ஜெயக்கு ரூஸிடம் பயிற்சி பெற்ற ஜெஸி, சிவகுமாரி ஆகிய பெண் கைவினைக் கலைஞர்களுக்கு அமைச்சர் அன்பரசன் விருதினை வழங்கினார். ஒரு வாழ்த்து சொல்லலாமே!
இருசக்கர வாகனமானது இரண்டு நபர்கள் மட்டுமே பயணம் செய்யக்கூடியது. இதில் மூன்று நபர்கள் பயணிக்கும் போது வாகனத்தின் மொத்த எடையானது (Laden weight) நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிகரிக்கிறது. இதனால் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாகிறது. மோட்டார் பிரிவு 194 C மற்றும் 194 D ன் படி மூன்று மாத காலம் வரை தகுதி நீக்கம் செய்யுமாறு குமரி எஸ். பி சுந்தரவதனதால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 6 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கசெல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் நாளை(டிச.2) முதல் அனைத்து விசைப்படகுகளும் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்றும், மின்வளத்துறை அறிவுறுத்தலின் படி தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் 5 நாட்டிக்கலுக்குட்பட்ட கடல் பகுதிகளில் தொழில் செய்யவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கோட்டாறு சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு டிச.2 மற்றும் 3ஆம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் திருவிழாவை காண வருவோர் நலன் கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2ம் நாள் மாநாடு இன்று காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு தடிக்காரன் கோணம் சந்திப்பில் வனத்துறை வேலி அமைத்து வைத்துள்ள விளையாட்டு மைதானத்தை மீண்டும் விளையாட்டு மைதானமாக மாற்ற வலியுறுத்தி பாஜக மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. அதேபோல் குருசு மலை பகுதிக்கு மின் இணைப்பு வழங்க கோரி ஆறுகாணி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடுக்கரை, காட்டுப்புதூர், திடல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 24 குக்கிராமங்களுக்கு ரூ.7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி செய்யப்பட உள்ளது என முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை எஸ்டிமாங்காடு பகுதியை சேர்ந்த தனது காதல் கணவன்.லிஜினுக்கு நாளை இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதை தடுத்து தன்னுடன் சேர்த்து வைக்க கோரி கடலூர் பகுதியை சேர்ந்த இளம்பெண். பிரியதர்ஷனி நேற்று(நவ.30) இரவு நாகர்கோவில் எஸ்பி அலுவலகம் முன்பு இரவில் திடீர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றார்.
நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடாவுக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு கச்சிகுடா செல்வது வழக்கம். நாளை டிச.1ம் தேதி இந்த ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக காலை 4.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 310 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 188 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 501 கன அடி மற்றும் பெருஞ்சாணி அணையில் இருந்து 510 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 295 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 169 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் அரபிக்கடலில் உருவான ஒக்கி புயல் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியது. இந்த புயல் தாக்கி இன்றுடன்(நவ.,30) 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒக்கி புயல் காரணமாக ஏராளமான மீனவர்கள் உயிர் இழந்ததுடன், காணாமலும் போயினர். இப்புயலால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியதுடன், விவசாய நிலங்களும் சேதமடைந்தன.
Sorry, no posts matched your criteria.