India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 45 சென்டு இடத்தை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்து அறநிலையத்துறை கன்னியாகுமரி பேரூராட்சியிடம் ஒப்படைத்தது. இதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் கோயிலுக்கு சொந்தமான இடம் பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்டதற்கு மதுரை உயர்நீதி மன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து இன்று குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்து அமைப்புகள் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். நிலைமை மோசமாவதை உணர்ந்து போலீசார் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ்பி சுந்தரவதனம் மேற்பார்வையில் போலீசார் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரையிலும் 150 கஞ்சா வழக்குகள் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தற்போது கஞ்சா செடி வளர்த்த வழக்கில் கைதாகி உள்ள இரண்டு பேரின் கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
நகர்ப்புற விவசாயிகளுக்கு பல வங்கிகள் விவசாய கடன் வழங்க மறுப்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானம் கோரி கன்னியாகுமரி மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். எதில், அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் விவசாயிகளுக்கு பாரபட்சமற்ற முறையில் நிதி உதவி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் இருந்து குமரிக்கு இன்று காலை 7-30 மணிக்கு ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் வந்த கொண்டிருந்தது. இந்த ரயில் அகஸ்தீஸ்வரம் அருகே விஜயநகரி என்ற இடத்தில் செல்லும்போது அவ்வழியே சென்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயில் மோதி அதே இடத்தில் தலை சிதைந்து உயிரிழந்தார். இது குறித்த தகவலறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்:- 18 கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 14.59 மற்றும் 14.56 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 41.45 நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 59.77அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 23.9 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.7அடி நீரும் இருப்பு உள்ளது.
குமரி மாவட்ட வனத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மண்ணுளிப் பாம்பை விற்பனை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று சிலர் மண்ணுளிப் பாம்பை விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வன சட்டங்களுக்கு உட்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 350 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 173 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 365 பெருஞ்சாணி அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 325 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுணர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5,201 விண்ணப்பித்த நிலையில் 3,232 பேர் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். கட்டுணர் பணிக்கு 787 பேர் விண்ணப்பித்த நிலையில், 360 பேர் பங்கு பெற்றனர். இந்த தேர்வில் மொத்தம் 2,398 பேர் பங்கேற்கவில்லை.
மழை காரணமாக டிச.,4, 6 தேதிகளில் நடைபெற இருந்த மாநில கலைத்திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 1 – 5 ஆம் வகுப்புகளுக்கு ஜன.,4ஆம் தேதி கோவையிலும், 6 – 8 வகுப்புகளுக்கு திருப்பூரிலும், 9,10ஆம் வகுப்புக்கு 3, 4ஆம் தேதி ஈரோட்டிலும், 11,12 வகுப்புகளுக்கு 3, 4ஆம் தேதிகளில் நாமக்கல்லிலும் போட்டிகள் நடப்பதாக CEO-க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாநில சமக்ரக சிக்ஷா திட்ட இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.