Kanyakumari

News December 5, 2024

ஆசிய நீளம் தாண்டுதலில் குமரி பெண்ணுக்கு வெள்ளிப் பதக்கம்!

image

மலேசியாவில் இன்று(டிச.,5) காலை நடந்த காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று, கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு மலையோர கிராமத்தை சேர்ந்த ஷமீஹா பர்வின் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News December 5, 2024

தோவாளை மலர் சந்தை இன்றைய விலை நிலவரம்

image

தோவாளை மலர் சந்தையில் இன்றைய(டிச.,5) மலர்கள் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பிச்சி ரூ.1,000, மல்லி ரூ.1,000, சம்பங்கி ரூ.200, அரளி ரூ.400, வாடாமல்லி ரூ.150, கோழி கொண்டை ரூ.150, துளசி ரூ.30, பன்னீர் ரோஜா ரூ.140, மஞ்சள் செவ்வந்தி ரூ.160, வெள்ளை செவ்வந்தி ரூ.300, கிரேந்தி ரூ.50, மரிக்கொழுந்து ரூ.150, தெத்தி ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News December 5, 2024

குமரி பெண்களுக்கு விருது: கலெக்டர் பாராட்டு

image

குமரியை சேர்ந்த கைவினை கலைஞர்களான ஜான்சி குரூஸ் மற்றும் சிவகுமாரி ஆகியோர் தேங்காய் சிரட்டை ஓட்டில் கலை பொருட்கள் தயாரித்ததற்காக, தமிழக அரசு விருது அறிவித்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு விருதை அமைச்சர் அன்பரசன் சமீபத்தில் வழங்கினார். இந்நிலையில் அந்த பெண் கைவினைக் கலைஞர்களை குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேற்று(டிச.,4) நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்.

News December 5, 2024

குமரி அணைகளுக்கான இன்றைய நீர் வரத்து விவரம்

image

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 285 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 185 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 465 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 410 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 350 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 173 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News December 5, 2024

ஆசாரிபள்ளம் E.N.T. பிரிவில் 20,592 பேருக்கு சிகிச்சை

image

ஆசாரிபள்ளம் GH காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் மாதம் 2,000 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு 20,592 பேருக்கு இந்த பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. காக்ளியர் இம்பிளாண்ட் (காதுவால் நரம்பு அறுவை) சிகிச்சை இதுவரை 76 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. விரைவில் 2 சிறுவர்களுக்கு காக்ளியர் இம்பிளாண்ட் சிகிச்சை செய்யப்படவுள்ளது என துறைத்தலைவர் சைரஸ் நேற்று கூறியுள்ளார்.

News December 5, 2024

பழங்குடியினருக்கு ரூ.5 லட்சம் வரை மானியம்: குமரி கலெக்டர்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயத் தொழிலாளர்கள் மேம்பாடு அடையும் பொருட்கள் விவசாய நிலம் வாங்க, நிலத்தின் சந்தை மதிப்பீட்டின் படித்திட்ட தொகையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இதனைப் பெறுவதற்கு தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

News December 5, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,5) காலை 9 மணிக்கு கீரிப் பாறையில் தொழிலாளர்கள் மருத்துவர் நியமிக்க கோரி 10வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம். #காலை 9.30 மணிக்கு ஜெயலலிதா 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.#காலை 10 மணிக்கு CPIM சார்பில் குளப்புரம் ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சித் தலைவரை கண்டித்து சத்தியாகிரக போராட்டம்.

News December 5, 2024

பாஜகவின் பிரித்தாலும் நரி தந்திர சாயம் வெளுத்து போனது: MLA

image

ராஜேஷ்குமார் எம்எல்ஏ நேற்று(டிச.,4) வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சம்பாலில் உயிரிழந்தவரின் குடும்பங்களை பார்க்க சென்றபோது சந்திக்கவிடாமல் தடுத்து நிறுத்தியதன் மூலம் பாஜக, RSS-ன் பிரித்தாலும் நரி தந்திர சாயம் வெளுத்து போனது. அரசியல் சாசனத்தை காத்திட ராகுல் காந்தி தலைமையில் ஒன்றிணைவோம் என கூறியுள்ளார்.

News December 5, 2024

குமரி: முருகன் கோயிலுக்கு காவடி எடுக்கும் P.W.D & போலீசார்!

image

நாட்டில் அணை, குளம் ஏரி, கால்வாய் அனைத்தையும் பராமரிப்பது பொதுப்பணித்துறையினர். எனவே குமரியில் மழை வளம் பெருகி, விவசாயம் செழிக்க அந்த துறையை சேர்ந்தவர்கள் காவடி தூக்கும் பழக்கம் மன்னராட்சி காலத்திலிருந்து இருந்ததது. அந்த வகையில் டிச.,13ஆம் தேதி கார்த்திகை மாத கடைசி வெள்ளி கிழமையை ஒட்டி பொதுப்பணித்துறைய & போலீசார் காவடி எடுத்து குமாரகோவில் முருகன் கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். SHARE IT.

News December 4, 2024

கேரளப் பகுதியில் மண் சரிவு NGL-TVM ரயில் போக்குவரத்து பாதிப்பு

image

நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பாதையில் கேரள மாநில பகுதியில் உள்ள பாலராமபுரத்தில் திடீரென இன்று மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் பாதையின் மேல் பகுதியில் உள்ள மண் சரிந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ரயில் பாதையில் விழுந்த மண் அகற்றப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது

error: Content is protected !!