India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
#குமரி அலங்கார உபகார மாதா ஆலய விழாவில் இன்று(டிச.9) காலை 10.30 மணிக்கு திருப்பலி; இரவு 9 மணிக்கு அன்பியங்களின் கலை நிகழ்ச்சி. #மேல ஆசாரிப்பள்ளம் நாராயணசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் மதியம் 12.30க்கு அன்னப்பால், தர்மம்; இரவு 8.30 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சி.#சமாதானபுரம் முத்தாரம்மன் கோவில் விழாவில் மாலை 5 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் நீராடுதல்.
குமரி அருகே புத்தேரி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் சக்தி சிறுமியான இவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “தங்கள் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது என்னையும் வேறு சிலரையும் நாய் கடித்துள்ளது. தொடர்ந்து நாய்க்கடி நடந்து வருவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு” அவர் கோரியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் பெருஞ்சிலம்பு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி, இவரது மகள் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1.4.24 அன்று தனியாக இறந்த மாணவியிடம் வாலிபர் ஒருவர் முகத்தில் மயக்க மருந்து தெளித்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்நிலையில் 7-ம் தேதி அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம் வருகிற 31 & ஜன.01 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது இந்த தேதியில் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டு வருகிற 30 & 31 ஆகிய தேதிகளில் இந்த விழா நடைபெறும் என்றும் இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 474 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 223 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 663 பெருஞ்சாணி அணையில் இருந்து 420 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 456 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 75 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
தமிழக முதல்வர், டி.பார்ம், பி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழகம் முழுக்க முதல்வர் மருந்தகம் அமைக்கலாம் என சுதந்திரதினத்தில் அறிவித்திருந்தார். டிச.5ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் mudhalvarmanundhagam.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நேற்று(டிச.07) குமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் உட்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் 474 பேர் மீது போக்குவரத்து விதி மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒருவாரத்தில் போக்குவரத்து விதி மீறிய 3,021 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விதி மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என போலீசார் கூறினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. 100 நாட்கள் காசநோய் கண்டறியும் முகாம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், டயாலிசிஸ் நோயாளிகள், எச்ஐவி நோயாளிகள், பழங்குடியினர் & ஊட்டச்சத்து குறைவு உள்ளவர்களுக்கு காசநோய் பரிசோதனை மார்ச் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று(disa.07) தெரிவித்தார்.
கன்னியாகுமரி அலங்கார உபகாரமாதா திருத்தலத்தில் காலை 10 மணிக்கு சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, இரவு 9 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா, அகஸ்தீஸ்வரம் தேவி முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை கொடைவிழாவையொட்டி மாலை 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, வடக்கு குண்டல் நாராயணசாமி கோயிலில் மாலை 6 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு இரவு 7 மணிக்கு அய்யா பவனி ஆகியவனை நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு இந்த ரப்பர் அனுப்பப்பட்டு வரும் நிலையில், சரிவில் இருந்த ரப்பர் விலை படிப்படியாக உயர்ந்து (100 கிலோ) கடந்த 4ம் தேதி 19900 ரூபாயாக இருந்தது. ரப்பர் விலை தற்போது மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. இன்று ரப்பர் விலை 19,600 ஆக உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 300 ரூபாய் விலை குறைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.