Kanyakumari

News December 13, 2024

குமரி வருகை தரும் செல்வ பெருந்தகை

image

குமரி மேற்கு மாவட்ட காங்., கமிட்டி புதிய அலுவலக கட்டடம் குழித்துறையில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை மறுநாள்(டிச.,15) நடக்கிறது. விழாவிற்கு மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் மாநில காங்., கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கலந்து கொண்டு திறந்து வைக்கிறார். விஜய் வசந்த் எம்பி, எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பட் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

News December 12, 2024

குமரி மாவட்டத்தில் 14ஆம் தேதி மக்கள் நீதிமன்றம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வருகிற 14-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. விபத்தில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள், உரிமையியல் வழக்குகள், செக்மோசடி, மணவிலக்கு தவிர்த்த குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சட்டப்படி ஆணை குழு செயலாளர் இன்று தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

குமரி மாவட்டத்தில் 800 நாய்களுக்கு கருத்தடை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய் கடி காரணமாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், மாவட்டத்தில் நாய்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த ஆண்டு மட்டும் 800 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News December 12, 2024

குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று(டிச.,12) அதி கனமழைக்கான ‘RED ALERT’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குமரி, சென்னை, காவிரி படுகை பகுதிகளில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால், காலை முதலே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE IT

News December 12, 2024

அயோத்திக்கு புனித நீர் அனுப்பும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி

image

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அருகேயுள்ள தாமரையூர் அய்யாவழி பதியில் இருந்து, 108 பதிகள் தாங்கல்களின் திருநாமம் மற்றும் புனிதநீர் உத்திரபிரதேசம் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிக்கு அனுப்பும் விழாவ இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்‌.என்.ரவி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தாமரைக்குளம் பதியில் உள்ள அய்யா வைகுண்டரை தலைப்பாகை அணிந்து வணங்கினார்.

News December 12, 2024

குமரி அணைகளுக்கு குறைந்த நீர் வரத்து!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 414 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 102 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து 653 கன அடியும், பெருஞ்சாணி அணையிலிருந்து 250 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 524 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 149 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News December 12, 2024

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,12) காலை 9 மணி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தாமரையூர் ஐயா பதியில் அய்யா வழி ஆய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்; 9.20 மணிக்குசாமி தோப்பு தலைமை பதியில் தரிசனம் செய்கிறார்; 9:30 மணிக்கு அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில் பங்கேற்கிறார். #காலை 9 மணிக்கு கீரிப்பாறையில் ரப்பர் தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க கோரி 16வது நாளாக தொடர் உண்ணாவிரதம் நடக்கிறது.

News December 12, 2024

கன்னியாகுமரியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(டிச.,12) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. SHARE IT.

News December 11, 2024

சரக்கு கப்பல் மோதி மூழ்கிய விசைப்படகு 

image

குமரி மாவட்டம், குளச்சல் அருகே இன்று(டிச.11) நடுக்கடலில் விசைப்படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு கப்பல் மோதியதில் மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது.  மூழ்கிய விசைப்படகில் தத்தளித்த 11 மீனவர்களை காப்பாற்றும்  முயற்சியில் சக மீனவர்கள் 3 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News December 11, 2024

உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் – விஜய் வசந்த்

image

இயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற இயலும். எனவே மத்திய அரசு இதற்காக போதிய நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அதை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் முன்மொழிந்துள்ளார்.

error: Content is protected !!