Kanyakumari

News December 20, 2024

மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவன்

image

அஞ்சுகிராமம் பால்குளம் அரசு குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்து வருபவர் மாரிமுத்து (35). மனைவி மரியசந்தியா இவர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நேற்றிரவு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்,இதில் மனைவியின் உடல் பாகத்தை துண்டு துண்டாக வெட்டி வெளியே வீச சென்ற போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார், போலீசார் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 19, 2024

குமரி – திப்ருகர் ரயில் 5 மணி 35 நிமிடம் தாமதம்

image

கன்னியாகுமரியில் இருந்து திப்ருகருக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. மாலை 5.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு செல்கிறது. ஆனால் இந்த ரயில் இன்று (டிச.19) 5 மணி 35 நிமிடம் தாமதமாக இரவு 11 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் காலதாமதமாக வந்து பராமரிப்பு பணி காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.

News December 19, 2024

திருவள்ளுவர் விழா ஒருங்கிணைப்பாளர் நியமனம்

image

கன்னியாகுமரியில் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவை நடத்துவதற்காக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சர் எ.வ.வேலு இன்று (டிச.19) தெரிவித்துள்ளார்.

News December 19, 2024

கிறிஸ்துமஸ் புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24, 31 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12:15 க்கு புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12:35 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். விருதாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி,  நாகர்கோவில் ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில் செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது.

News December 19, 2024

குமரி: முதல்வரின் நிகழ்ச்சி விவரங்கள்

image

“முதல்வர் மு.க ஸ்டாலின் டிச.30 மதியம் குமரி வருகிறார். நெடுஞ்சாலை துறை சார்பில் கண்ணாடி கூண்டு பாலத்தினை திறந்து வைத்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து சுற்றுலாத் துறை சார்பில் பூம்புகார் படகுத்துறையில் அமைந்துள்ள ஒளி மற்றும் ஒளி காட்சிக்கூடத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். 31ஆம் தேதி திருவள்ளுவர் வெள்ளி விழாவில் பங்கேற்கிறார்” என அமைச்சர் எ.வ வேலு கூறினார்

News December 19, 2024

குமரி மாவட்ட மழை நிலவரம் வெளியீடு

image

குமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவட்டாறு மற்றும் அடையாமடையில் தலா 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கல்லார் 11 மி.மீ, திருப்பதி சாரம் 8 மி.மீ, பேச்சிப்பாறை மி.மீ, பெருச்சாணி மி.மீ, திற்பரப்பு மி.மீ, மேல்புறம் தலா 4 மி.மீ, புத்தன் அணை, சுருளோடு கீழே கோதையார் தலா 3 மி.மீ, பாலமோர் மற்றும் ஆரல்வாய்மொழி பகுதிகளில் தலா 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

News December 19, 2024

குமரியில் விரைவில் தொடங்கப்படும் புதிய திட்டம்

image

குமரி: கிராமங்களில் உள்ள ஏழைபெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.3200 செலவில் 40 நாட்டுகோழி குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. ஒரு ஊராட்சியில் 100 பயனாளிகள் வீதம் 9 ஊராட்சிகளில் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் ஒப்புதலோடு திட்டம் செயல்பட தயாராக உள்ளது என கால்நடை பராமரிப்புத்துறையினர் இன்று கூறினர்.

News December 19, 2024

கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை

image

குமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி இன்று(டிச.19) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு மீதான விவாதத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை கோரி பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

News December 19, 2024

குமரியில் டோல்கேட் கட்டணத்திற்கு விலக்கு – ஆட்சியர்

image

குமரியில் இம்மாதம் 30 மற்றும் 31ம் தேதிகளில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. முதலமைச்சர் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதனையொட்டி இம்மாதம் 20 ம் தேதி முதல் ஜன., 2 ம் தேதி வரை குமரிக்கு வரும் வாகனங்களுக்கு குமரி zero பாய்ண்ட், விவேகானந்தபுரம், கோவளம் மற்றும் பிறபகுதிகளில் நுழைவு கட்டணம் வசூல் செய்யக்கூடாது என ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.

News December 19, 2024

இன்ஸ்டாவில் பழகி 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் கொடுமை!

image

கொல்லங்கோடு வள்ளவிளையை சேர்ந்தவர் ஜெர்வின்(21). இவர் வீட்டின் அருகில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி, சிறுமியை தனியாக அழைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியிடம், தாயார் விசாரித்தபோது நடந்ததை கூறியுள்ளார். புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் ஜெர்வின் மீது போக்சோ வழக்குப் பதிந்து ஜெர்வினை தேடுகின்றனர்.

error: Content is protected !!