India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டத்தில் நாளை (பிப்.14) சில அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக தெங்கம் புதூர், ராஜாக்கமங்கலம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய உப மின் நிலையங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்த மின்பாதையில் மின்னோட்டம் இருக்காது என கருதி பொதுமக்கள் மின்னூட்டிகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க

பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கும் விக்டர் ராஜ தாஸ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கொடுத்த பணத்தை ஜெயக்குமாரும் அவரது சகோதரரும் காண்ட்ராக்டருமான விஜயகுமாரும் நேற்று இரவு கேட்ட போது விக்டர் ராஜாதாஸ் காரால் விஜயகுமாரை மோதினார். இதில் விஜயகுமார் உயிரிழந்தார். இதனை கோட்டார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் நடைபெறும் சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கனரக வாகனங்கள் 2 நாட்களுக்கு மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பிப்.14,15 ஆகிய தேதிகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையினை மீறி மாவட்டத்திற்குள் நுழையும் கனிமவள கனரக வாகனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குமரி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ.5000 வரலையா? இங்கு <

குமரி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ.5000 வரலையா? இங்கு <

மத்திய அரசின் தொழிலாளர் சட்ட திருத்தங்கள், 2025 விதை திருத்த சட்டம் மசோதா திருத்தப்பட்ட 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல் போராட்டங்கள் நேற்று நடைபெற்றது.இது தொடர்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,612 பேர் மீது மாவட்டம் முழுவதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவில் மாநகராட்சி எஸ்.பி அலுவலகம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் ரோஸிட்டா திருமால், பா.ஜ.க பொருளாளர் முத்துராமன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட வழக்குகள் 780 பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

குமரி மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? இனி வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. இங்கு <
Sorry, no posts matched your criteria.