India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குளச்சல் பகுதியைச் சேர்ந்த கபீர் (66) என்பவர், தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2-ம் தேதி, பணியில் இருந்தபோது குப்பைகளைச் சேகரிக்க வந்த நகராட்சி குப்பை வண்டி அவர் மீது மோதி படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முந்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி நசீமாஅளித்த புகாரின் பேரில் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.

கன்னியாகுமரி மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். .

கன்னியாகுமரி மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுக்க மறக்காம ஷேர் பண்ணுங்க.

தெள்ளாந்தியை சேர்ந்தவர் ஜாவின் பிரபாகர் (31). இவருக்கு திருமணமாக வில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த இவருக்கு மனநலம் பாதிப்பும் இருந்தது. இதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் விஷம் குடித்தார். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

கன்னியாகுமரி மக்களே, நிலத்துக்கான E.C வில்லங்க சான்றிதழ் வேணுமா? இ<

கன்னியாகுமரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <

குமரி மாவட்டத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு 281 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 500 பேர் கைது செய்யப்பட்டனர். 155 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில் மாவட்டத்தில் போதைப் பொருட்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக புதியதாக மோப்ப நாய் சென்னையில் இருந்து விரைவில் குமரி மாவட்டம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

குமரி மாவட்ட மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களை பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

செண்பகராமன் புதூர் அரசியல் காலனியை சேர்ந்தவர் மதுரை வீரன். இவரது மகள் மீனாட்சி (15). இவர் செண்பகராமன் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 20 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததால் மீனாட்சி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.