Kanyakumari

News December 18, 2024

அஞ்சல் துறை குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு 

image

இந்திய துறை சார்பாக டிச.24 அன்று நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக டிச.26 அன்று 11.00 மணிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என கன்னியாகுமரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 18, 2024

போக்குவரத்து விதிமீறிய 70 பேர் மீது வழக்கு

image

நாகர்கோவிலில் ஒருவழிப்பாதையில் வாகனம் ஓட்டியதாக 70 பேர் மீது இன்று போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக ஒரு வழி பாதையில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

News December 18, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 2 மணிக்குள் முடிக்கப்படும் 

image

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மதியம் 3:30 மணி வரை நடைபெற்றதால் இடைவேளையில் விவசாயிகளுக்கு தயிர் சாதம் வழங்க வேண்டும் என்று நேற்று பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ ஆட்சியரிடம்  கோரிக்கை மனு அளித்தார். இந்லையில் ஆட்சியர் அழகு மீனா  நாளை நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை 2 மணிக்கே முடிப்பதாக தெரிவித்துள்ளார்.

News December 18, 2024

குமரி அணைகளுக்கு இன்று நீர்வரத்து அதிகரிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 951 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 340 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து 610 கன அடியும், பெருஞ்சாணி அணையிலிருந்து 300 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 548 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 141 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

News December 18, 2024

குமரியில் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம்!

image

கன்னியாகுமரி மாவட்ட மாணவ மாணவியர் நலன் கருதி, குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் மெர்லியண்ட் தாஸ் நேற்று(டிச.,17) தெரிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

News December 18, 2024

ராணிதோட்டத்தில் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி – அறிவிப்பு

image

நாகர்கோவில் IRT ஓட்டுநர் பயிற்சி மையத்தில் ஐன.,2ஆம் தேதி கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி ஆரம்பமாக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள்(மகளிர் உட்பட) இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், அசல் ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 ஆகியவற்றை 2 செட் ஜெராக்ஸ் எடுத்து அதற்குரிய கட்டணம் செலுத்தி பயிற்சி பயிற்சியில் சேரலாம்.

News December 18, 2024

குமரியில் 1 கிலோ உள்ளி 100 ரூபாய்க்கு விற்பனை!

image

குமரி மாவட்டத்தில் உள்ளி(சின்ன வெங்காயம்) 1 கிலோ விலை ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட வட மாநிலங்களில் சமீபத்தில் பெய்த மழையால் உள்ளி உற்பத்தி பாதித்து, வரத்து குறைந்ததால் ரூ.75-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் குமரி சந்தைகளில் கிலோ ரூ.400-க்கு விற்பனையான பூண்டு தற்போது ரூ.420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News December 18, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,18) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு, மருத்துவர்களை நியமிக்ககோரி 21-வது நாளாக அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம். #காலை 10 மணிக்கு மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் CPIML Red Flag ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.#மாலை 5 மணிக்கு மத்திய அரசை கண்டித்து சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மாநகராட்சி பூங்கா முன்பு தர்ணா போராட்டம்.

News December 18, 2024

தமிழ் புதல்வன்: குமரி மாணவர்கள் 7,578 பேருக்கு மாதம் ரூ.1000

image

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து, தற்போது மேற்படிப்பு படிக்கும் குமரி மாவட்ட மாணவர்கள் 7,578 பேருக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தில் மாதம் ரூ.1,000 வீதம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனவும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(டிச.,17) தெரிவித்துள்ளார்.

News December 17, 2024

திருக்குறள் வினாடி வினா போட்டி

image

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி இம்மாதம் 26 ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்டத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் குழுக்களை மாவட்ட அளவில் தெரிவு, செயவதற்காக மாவட்ட அளவிலான முதல் நிலை வினாடி வினா போட்டி  21ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. 32 அதிகாரங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.

error: Content is protected !!