Kanyakumari

News April 21, 2025

திருக்குறள் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை

image

திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி இயக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இந்த ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் இந்த ரயிலில் பெரிதும் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலின் சேவையை தினசரி இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

News April 21, 2025

மக்கள் குறைவிற்கு முகாமில் 580 கோரிக்கை மனுக்கள்

image

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி, 580 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று பெற்றுக்கொண்டார்.

News April 21, 2025

கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை தண்டனை

image

கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிடாலம் பகுதியில் 2014ஆம் ஆண்டு, புறம்போக்கு நிலத்தை மீட்க சென்ற அதிகாரிகளை தாக்கியதாக, தற்போதைய கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News April 21, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 10 மணி – தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக மாற்றக்கோரி அதன் முன்பு தூத்துக்குடி புனித தோமையார் மறை வட்டாரம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணி – போளூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரன் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது.

News April 21, 2025

கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

image

கன்னியாகுமரி: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை திருட்டு

image

ஈத்தாமொழி அருகே பெரிய விளையைச் சேர்ந்தவர் காந்திமதி(70). ஈஸ்டர் பண்டிகையொட்டி நாகர்கோவில் நேசமணி நகரில் உள்ள ஆலயத்திற்கு வந்தார். பிரார்த்தனை முடிந்து அவர் பஸ்ஸில் ஏறி டெரிக் சந்திப்புக்கு சென்ற நிலையில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் செய்த நிலையில் நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2025

கல்கத்தாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்றவர் கைது

image

கல்கத்தாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருசடி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆரல்வாய்மொழி குருசடி பகுதி சேர்ந்த ஜான் பெஞ்சமின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 230 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News April 20, 2025

இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

image

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE* பண்ணுங்க

News April 20, 2025

கன்னியாகுமரியின் சிறந்த கோயில்கள் & வழிபாட்டு நேரம்

image

1. குமாரி அம்மன் கோவில்
காலை 4.30 – 12.00 மற்றும் மாலை 4.30 – இரவு 8.00

2.ஆதிகேசவப் பெருமாள் கோவில்,திருவட்டார்
காலை 6.00 – 11.00 & மாலை 5.00 – 8.00

3.திருநந்திக்கரை குகைக் கோயில்,திருவட்டாறு
காலை 5:00 – 11:00 & மாலை 5:00 – இரவு 8:00

4.நாகராஜா கோவில்,கன்னியாகுமரி
காலை 4.00 – 12.00 & மாலை 5.00 – 8.30

5.தாணுமாலயன் கோவில்,சுசீந்திரம்
காலை 4.30 – 12.30 & மாலை 4.30 – 8.30

*ஷேர் பண்ணுங்க

News April 20, 2025

குமரி : காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க நடவடிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் துறையில் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலகட்டங்களில் தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகபட்சம் 2500 முதல் 3500 வரை ரூபாய் விலக்கு அளிக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து மேலும் தகவல் பெற அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு செல்லலாம் என அறிவிப்பு.

error: Content is protected !!