Kanchipuram

News November 23, 2024

சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான கால வரம்பு நீட்டிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், வேளாண்மை – உழவர் நலத்துறையின் 2024-2025ஆம் ஆண்டிற்கான சம்பா நெற் பயிர் காப்பீட்டிற்கான கால வரம்பு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். பதிவு செய்யாத விவசாயிகள், விரைவாக இ-சேவை மையத்துக்கு சென்று பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க

News November 23, 2024

13,000 மீன்குஞ்சுகள் ஏரியில் வளர்ப்புக்காக விடப்பட்டன

image

வாலாஜாபாத் ஒன்றியம், கொட்டவாக்கம் மூலப்பட்டு ஏரியில் நேற்று (22.11.2024) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மீன்குஞ்சுகள் இருப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், 13,000 மீன்குஞ்சுகளை ஏரியில் வளர்ப்புக்காக விட்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி உள்ளார்.

News November 22, 2024

தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள்

image

2024ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திய பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள், விண்ணப்பத்தினை ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

News November 22, 2024

படியில் இருந்து மேலே வரச்சொன்ன நடத்துநர் மீது தாக்குதல்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு பேருந்து, இருங்காட்டுக்கோட்டை பகுதியில் நின்று ஆட்களை ஏற்றிக் கொண்டிருக்கும்போது, மாணவர்கள் சிலர் பேருந்துக்குள் ஏறாமல் படியில் நின்றனர். அவர்களை, பேருந்து நடத்துநர், படியைவிட்டு மேலே ஏறி நிற்கும்படி வற்புறுத்தியதால் மாணவர்கள் நடத்துநரை சரமாரியாக தாக்கினர். இதில், காயமடைந்த நடந்துநர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News November 22, 2024

முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க கால அவகாசம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பி.பார்ம்., பட்டம் மற்றும் டி.பார்ம்., பட்டய ஆகிய படிப்புகளில் மருத்துவச்சான்று பெற்றவர்கள், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வரும் நவ.20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கால அவகாசத்தை நீட்டித்து நவ.30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்

News November 22, 2024

குழந்தை நலக்குழு பதவிக்கே விண்ணப்பிக்கலாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நலக்குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2015 இளைஞர் நீதி சட்டத்தின் அடிப்படையில், குழந்தை நலத்தில் 7 ஆண்டுகள் அனுபவமுள்ள 35-65 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் <>dsdcpimms.tn.gov.in<<>> என்ற இனையதளத்தில் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News November 22, 2024

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

காஞ்சிபுரத்தில், நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், இன்று (நவ.22) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News November 22, 2024

குழந்தை உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு ஆட்சியர் பரிசு 

image

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், 7 மாத ஆண் குழந்தையின் தொண்டையில் தைல டப்பா சிக்கிக் கொண்டது. இதனை, டாக்டர் மணிமாலா நுணுக்கமாக செயல்பட்டு, அறுவை சிகிச்சையின்றி டப்பாவை வெளியே எடுத்து, குழந்தை உயிரை காப்பாற்றினார். இந்நிலையில், டாக்டர் மணிமாலாவுக்கு நேற்று (21.11.2024) மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கினார்.

News November 21, 2024

ஊழியர்கள் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

image

சாம்சங்கில் அங்கீகரிக்கக்கோரி நடந்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக எஸ்.எச்.எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 91 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டு சிஐடியூ சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எஸ்.எச்.எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக உண்ணாவிரதம் தவிர மற்ற போராட்டத்தை நடத்த அனுமதி அளித்துள்ளது. 

News November 21, 2024

காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

image

ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி இருப்பதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்த கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!