India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாமல் அம்பேத்கர் சிலை அருகே பைக்கில் சென்றவர்கள் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் தாய் கஜலட்சுமி (40) இவரது மகன்கள் மதன்( 20 ), மனோஜ்( 18 ) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்கள் இரு சக்கர வாகனத்தில் திருப்புட் குழியில் இருந்து பாலுசட்டி சத்திரம் செல்லும் வழியில் தாமல் அம்பேத்கர் சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழக முதல்வர் ஸ்டாலின் தரக்குறைவாக பேசியதாகக்கூறி, பாமகவினர் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் மகேஷ்குமார் தலைமையில், காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உட்பட மொத்தம் 67 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் பின் இரவில் விடுவிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அவற்றில், தொடர் கனமழை காரணமாக 42 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 149 ஏரிகள் 75% – 100%, 239 ஏரிகள் 50% – 75%, 328 ஏரிகள் 25% – 50%, 150 ஏரிகள் 25%க்கும் கீழ் நிறைந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை நீடிக்கும் என்பதால், நீரிருப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், சபரிமலைக்கு குழுவாக கார், வேன், ரயில் வாயிலாக சென்று வருகின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம், திருச்சி வழியாக பம்பைக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நடைபெற்று வரும் விற்பனையாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு இன்று (நவ.27) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெற இருந்தது. கனமழை காரணமாக, நேர்முகத் தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் டிச.6ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக இருப்பதால், மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.
கனமழை காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க
காஞ்சிபுரத்தில் நாளை (நவ.27) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து காஞ்சிபுரத்தில் மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பூந்தண்டலம் ஊராட்சி நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (45) மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி (40). ரவி மது அருந்திவிட்டு தினமும் ஜெயந்தியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த ஜெயந்தி கடந்த வாரம் ரவி மீது சமையல் எண்ணெயை கொதிக்க வைத்து ஊற்றினார். இதில் உடல் வெந்த நிலையில் ரவி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பாதிப்பு, நெடுஞ்சாலை துறை சாலைகள் பாதிப்பு தொடர்பாக 9381738585, 9952075411 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் புகார் அளிக்கலாம் என நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.