Kanchipuram

News November 30, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 ஏரிகள் 100% நிரம்பியது

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. பெஞ்சல் புயல் காரணமாக விடிய விடிய பெய்யும் கனமழையால் இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 7 ஏரிகள் 100 சதவீதமும், 67 ஏரிகள் 90 சதவீதமும்,107 ஏரிகள் 75 சதவீதமும்,143 ஏரிகள் 50 சதவீதமும், 56 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. மழை தொடர்வதால் இனி வரும் நாட்களில் நீர்மட்டம் மேலும் உயரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 30, 2024

காஞ்சிபும் மாவட்டத்தின் மழை பொழிவு நிலவரம் 

image

காஞ்சிபுரம் தாலுகா பகுதியில் 7.6 மில்லி மீட்டர், உத்திரமேரூர் தாலுகாவில் 8.00மில்லி மீட்டர், வாலாஜாபாத் தாலுகாவில் 14.6 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் 26.2 மில்லி மீட்டர், குன்றத்தூர் தாலுகாவில் 11.4 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 19  மில்லி மீட்டர் என மழை பொழி பதிவாகியுள்ளது. அதிகபட்சம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா 26.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

News November 30, 2024

ஸ்ரீபெரும்புதூரில் 2.6 சென்டி மீட்டர் மழை பதிவு

image

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரையும் இடைவிடாமல் பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஸ்ரீபெரும்புதூரில் அதிகபட்சமாக 2.6 செ.மீ., மழை பதிவாகியது. குன்றத்தூர் 1.1 செ.மீ; வாலாஜாபாத் 1.4 செ.மீ; காஞ்சிபுரம் 0.7 செ.மீ, உத்திரமேரூர் 0.8 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. 

News November 30, 2024

காஞ்சிபுரம்: அவ்வையார் விருது 2025 விண்ணப்பங்கள் வரவேற்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்  தகவலின்படி, பெண்கள் முன்னேற்றம் சார்ந்த அவ்வையார் விருது-2025 உலக மகளிர் தினத்தில் முதல்வரால் வழங்கப்படும். விண்ணப்பங்கள் 31.12.2024க்குள் https://awards.tn.gov.in இணையதளத்தில் 06.01.2025க்குள் விண்ணப்பித்து, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

News November 30, 2024

ஓட்டப்பந்தய போட்டியில் காஞ்சிபுரம் மாணவி அசத்தல்

image

சென்னை பல்கலைக்கழகம் உடற்கல்வி துறை சார்பில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டி, கடந்த நவ.26 – 28 வரை சென்னை ஜவஹர்லால் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், காஞ்சிபுரம் கீழம்பியில் உள்ள காஞ்சி கிருஷ்ணா கல்லூரி மாணவி வினிதா, 10,000மீ., 5,000மீ., ஓட்டப்பந்தய போட்டியிலும் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தியுள்ளார்.

News November 30, 2024

காஞ்சிபுரத்தில் ருத்ர தாண்டவம் ஆடும் மழை

image

ஃபெஞ்சல் காரணமாக, காஞ்சிபுரத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மாங்காடு, படைப்பை, சுங்குவார்ச்சத்திரம், படைப்பை, ஸ்ரீபெரும்புதூர், திருப்புக்குழி, திருபுவனம், சிறுகாவேரிபாக்கம், மதுராமங்கலம், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர், சாலவாக்கம், அரும்புலியூர், தண்டலம், வல்லம் ஆகிய பகுதிகளில் மழை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. புயல் இன்று பிற்பகலுக்கு மேல் கரையை கடக்கும். உங்க ஏரியாவில் மழையா?

News November 30, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்தில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 29, 2024

நாளை கல்லூரிகளுக்கு விடுமுறை; பள்ளிகளுக்கு சிறப்பு வகுப்பு கூடாது

image

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நாளை (30.11.2024) கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை தினம் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என தனியார் பள்ளிகளுக்கான கல்வி அலுவலர் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

News November 29, 2024

அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக புயல் கரையை கடக்கும் போது கன மழையுடன் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

நியாய விலை பணியாளர்கள் நேர்முக தேர்வு ஒத்திவைப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நடைபெற்று வரும் விற்பனையாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 30.11.2024(முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டு, எதிர்வரும் 07.12.2024 (முற்பகல் மற்றும் பிற்பகல்) அன்று காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!