India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், 23 குடிசைகள் சேதமடைந்துள்ளதாகவும், பல்வேறு பகுதிகளில் 14 மின்கம்பங்கள் மற்றும் 225 ஹெக்டேர் விளைநிலங்கள் மழையால் சேதம் அடைந்துள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு வெளியிட்டார். 34 மரங்கள் சாலையில் இருந்து அகற்றப்பட்டன. 23 நிவாரண முகாம்களில் தற்போது வரை 564 நபர்கள் தங்கியுள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. மற்ற அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் மாவட்டத்தில் முதலமைச்சர் மருந்தகம் அமைப்பதற்கு விரும்புவோர் விண்ணப்பிக்கும் தேதியை நீடித்துள்ளது. இதைத் தொடர்ந்து டிப்ளமோ டிகிரி முடித்தவர்கள் ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிப்பதற்கு டிசம்பர் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் இயந்திர தளவாடங்களின் மீதான முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை வருவாய் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்நிறுவனங்கள் உத்யம் பதிவுச் சான்றிதழ் பெறுவதன் வாயிலாக, நிறுவனத்தை நிரந்தரமாக அரசு அங்கீகாரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு udyamregistration.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் 5 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளன. இங்கு பயன்படுத்தப்படும் ஜீப்கள், 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட வாகனங்களாக இருப்பதால், கழிவு நீக்கம் செய்ய ஊரக வளர்ச்சி துறை, அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. உத்திரமேரூர் ஒன்றியத்தில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஜீப்கள் ஏலம் விடவில்லை. இதனால், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் துருபிடித்து வருகின்றன. அவற்றை ஏலம் விட வலியுறுத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பெங்கள் புயல் மழையின் காரணமாக காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிக மழை வந்தாலும் கவலை, குறைந்த மழை பெய்தாலும் கவலை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக உத்திரமேரூரில் 16.5 செ.மீ., காஞ்சிபுரத்தில் 14.5 செ.மீ., செம்பரம்பாக்கம் 13 செ.மீ.,, வாலாஜாபாத் 12 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர் 12.4 செ.மீ., குன்றத்தூர் 10.3 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக மாறியது குறிப்பிடத்தக்கது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஏரிக்கு நீர்வரத்து மாலை 4 மணி அளவில் 4856 கனஅடியாக இருந்த நிலையில் 8 மணி நிலவரப்படி 5610 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 2515 மில்லியன் கன அடியாக நீர்இருப்பு உள்ளது.
சென்னை காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் அதி கன மழை பெய்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் உட்பட ஏழு மாவட்டங்களில் நாளை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். எனவே மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 61ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 909 ஏரிகள் உள்ள நிலையில் 61 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன. மேலும், 75% மேலாக-159ஏரிகளும், 50% மேலாக-246 ஏரிகளும், 25% மேலாக-316ஏரிகளும், 25% கீழாக-126 ஏரிகளும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரே ஒரு ஏரியில் மட்டும் நீரின்றி இருப்பதாகவும் பொதுபணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.