Kanchipuram

News December 21, 2024

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரத்தில் இன்று (டிச.21) மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பழையசீவரம் துணை மின்நிலையம் ஓரிக்கை துணை மின் நிலையம்மற்றும் ஓரிக்கை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஏகனாம்பேட்டை, மேலச்சேரி, பழையசீவரம், வாலாஜாபாத், தென்னேரி, ஊத்துக்காடு, திருமுக்கூடல், சின்ன காஞ்சிபுரம், ஐயம்பேட்டை, செவிலிமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

News December 20, 2024

காஞ்சிபுரம் அருகே வட மாநில தொழிலாளி கொலை

image

குன்றத்தூர் அருகே பழந்தண்டலத்தில் உள்ள தனியார் கம்பெனியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த மஞ்சய் பஸ்வான் (35) வேலை செய்து வந்தார். உடன் வேலை செய்யும் நேபாளம் நாட்டை சேர்ந்த ஜித்தையின் மகரா(22),ராம்(20) ஆகியருடன் நேற்று தகராறு ஏற்பட்டது. மகரா கத்தியால் குத்தியதில் மஞ்சய் பஸ்வான் சம்பவ இடத்திலேயே பலியானார்.குன்றத்தூர் போலீசார் ஜித்தையன் மகரா மற்றும் ராம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 20, 2024

கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாதாந்திர கூட்டத்தில் இன்று கூட்டத்திற்கு வராத மாவட்ட அதிகாரிகளை கணக்கெடுத்து அவர்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் வழங்குமாறும், அதற்கான கணக்கெடுப்புகளை எடுத்து தன்னிடம் சரி பார்த்துக் கொண்ட பின் அவர்களுக்கு வழங்க வேண்டும் என உடன் இருந்த அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.

News December 20, 2024

டிச.27,காஞ்சி மகா பெரியவர் சுவாமிகளின் ஆராதனை மகோற்சவம்

image

காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியகா இருந்து வந்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 31வது வார்ஷிக ஆராதனை மகோற்சவம் வரும் டிச.27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருப்பதாக சங்கர மரத்தின் மேலாளர் சுந்தரேசன் ஐயர் அவர் தெரிவித்துள்ளார். டிச.25 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி டிச.27 ஆம் தேதி வரை 3 நாட்களிலும் வேதபாராயணம், ஆன்மீக சொற்பொழிவுகள், கீதாஞ்சலி நடைபெறும் என அறிவிப்பு

News December 20, 2024

காஞ்சிபுரத்தில் 5 தொழிற்சாலைகளில் மோசடி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2023 நவம்பர் முதல் 2024 நவம்பர் வரை, உத்திரமேரூர் அடுத்த காட்டுப்புதுார் கிராமத்தில் உள்ள ‘யங் பிராண்ட் அபாரல் லிமிடெட்’ உள்ளிட்ட 5 தொழிற்சாலைகளில், பல்வேறு வகையிலான மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், கோடிக்கணக்கான ரூபாய் இந்த மோசடி சம்பவங்களால், தொழிற்சாலைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

News December 20, 2024

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8 கோடி கடன் வழங்கியுள்ளது

image

ஸ்டேட் வங்கி இந்த நிதியாண்டில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 70 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8 கோடி வரை கடன் வழங்கியிருப்பதாக காஞ்சிபுரம் கிளையின் முதன்மை மேலாளர் ச.மணிகண்டன் தெரிவித்தார். தவணைக்கடன்,மூலதனக்கடன் ஆகியனவும் வழங்கி ஸ்டேட் வங்கி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான சேவை வழங்கி வருவதாகவும் ச.மணிகண்டன் தெரிவித்தார்.

News December 20, 2024

காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் லேசான மழை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு பல இடங்களில் லேசான மழை பெய்தது. குறிப்பாக, அய்யம்பேட்டை, ஊத்துக்காடு, வாலாஜாபாத், அய்யங்கார்குளம், சிறுவாக்கம், நெட்டப்பேட்டை, வெம்பாக்கம், வேடல், ஏனாத்தூர், மீனாட்சி மருத்துவ கல்லூரி, பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 3 மணி வரை சாரல் மழை பெய்து வருகிறது. மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பாக இருங்கள். உங்க ஏரியாவில் மழையா?

News December 20, 2024

காமாட்சி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.57.36 லட்சம்

image

காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டதில் ரூ.57,36,782 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் தங்கம் 178 கிராமும்,வெள்ளி 611கிராமும் காணிக்கை கிடைத்துள்ளது. இதில் செயல் அலுவலர் ச.சீனிவாசன், கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர், மணியக்காரர் சூரியநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

News December 20, 2024

பழங்குடியினருக்கு புதுப்பிக்கப்பட்ட வீடுகள் திறப்பு விழா

image

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் சார்பில் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த 9 குடும்பங்களுக்கான வீடுகள் புதுப்பிக்கப்பட்டு அவற்றை திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு புஞ்சை அரசந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் பி.மீனாபழனி தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.மோகன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் கண்காணிப்பகத்தின் நிர்வாகி து.ராஜி வரவேற்றார்.

News December 19, 2024

கொரோனா காலத்தில் பெறப்பட்ட அட்வான்ஸ் தொகை தள்ளுபடி

image

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 2500 உறுப்பினர்களில் சுமார் 975 உறுப்பினர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக ரூ.4000 கொரோனா கால அட்வான்ஸ் கடனாக அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் பெற்றனர். அந்த கடனை திரும்ப பெற வேண்டுமென உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் கைத்தறி துணி நூல் துறை இயக்குனர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!