India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில், கடந்த 24ஆம் தேதி செல்போன் பேசியபடி, தடம் எண்: டி-68 என்ற அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் தருமன், மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை அலுவலர் தெரிவித்தார். அதன்படி, இரு தினங்களுக்கு முன், ஓட்டுநர் தருமனை, 15 நாட்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, போக்குவரத்து நிர்வாகம் உத்தரவிட்டது.
தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி, 25 % மானியம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மக்கள் இத்திட்டத்தில் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் கட்டட வேலைகள், மூங்கில், சணல் உள்ளிட்ட 25 தொழில்கள் அடங்கியுள்ளன என அவர் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ளது. நேற்று அந்த ஏரியில் குளிக்க சென்ற 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் காவல்துறையினர் இது குறித்து எச்சரிக்கை பலகையை அப்பகுதியில் வைத்துள்ளனர். அதில், ஏரியில் இறங்கவோ, குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்தத் தவறிய மற்றும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுகவை கண்டித்து நாளை (டிச.30) காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
காஞ்சிபுரம் காந்திரோடு பகுதியில் கொண்டுவரப்பட்ட புதிய போக்குவரத்து மாற்றத்தால், பாதசாரிகள், ஆம்புலன்ஸ் போன்றவை செல்ல முடியவில்லை. பழையபடி ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டுமென வியாபாரிகள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால், புதிய போக்குவரத்து மாற்றத்தை போலீசார் மாற்றவில்லை. இந்நிலையில், இன்று (டிச.29) கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தர்பாடி அகரம் கிராமத்தில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, வரும் 30ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் மற்றும் வெண்ணை, வடமாலை சாற்று முறை நடைபெற உள்ளது. மாலை உறி அடித்தல், சறுக்குமரம் ஏறுதல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இரவு 7 மணிக்கு மலர் அலங்காரத்தில் வீர ஆஞ்சநேயர் வீதியுலா மற்றும் நாடகம் நடைபெற உள்ளன.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில் 93 டாஸ்மாக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம் நாவலுார் பகுதியில் 4601 என்ற வெளிநாடு மது விற்பனை செய்யும் எலைட் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அங்கு, நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மண்டல டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வு செய்தபோது, மது விற்பனை செய்த ரூ.1.37 கோடி வங்கிக்கு செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.
காஞ்சிபுரத்தில், சமீப நாட்களாக சிலிண்டர் முன்பதிவு செய்து 10 நாட்களாகியும், சிலிண்டர் வருவதில்லை என குடும்ப பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஏஜென்சிக்கு போனில் அழைத்தாலும், முறையான பதில் அளிப்பதில்லை. இதுதொடர்பான புகார், சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. சப்ளை செய்யும்போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், எடை இயந்திரம் கொண்டு வருவதில்லை என, பல்வேறு புகார்களை நுகர்வோர் தெரிவிக்கின்றனர். உங்க கருத்து?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையம் மூலம் கலைஞர் கைவினைத் திட்டத்தின்கீழ் கைவினைக் கலைகள் மற்றும் கலைத்தொழில்கள் செய்வோர்களுக்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு கடனுதவி வழங்கப்படுகிறது. இதனை பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்காக, அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி 05.01.2025 அன்று காலை 6.00 மணிக்கு பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.