India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில், 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை, பூக்கடைச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22), தனுஷ் (22) கடந்த டிச.25ஆம் தேதி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். புகாரின் பேரில் போக்சோவில் நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல், 15 வயது சிறுமியை அழைத்து சென்று வேலுாரைச் சேர்ந்த ராஜேஷ் (22) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்க, திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் ஆகியோர் 01.01.2005 முதல் 01.07.2008 வரையான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கான கல்வி தகுதி 12ஆம் வகுப்பு அல்லது 3 ஆண்டு பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும். இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https//agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சரான டி.கே. சிவகுமார் காஞ்சிபுரத்தில் ஒருநாள் பயணமாக சுற்றுப்பயணம் வருகை தந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகைபுரிந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன. 17ஆவது சுற்றுக்கு இளையனார், வேலுார், கம்மராஜபுரம், களியனுார், ஏனாத்துார், கரூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கொழுமுடிவாக்கம், மலையம்பாக்கம், அம்மையப்பநல்லுார், காரணை, ஒழுகரை, கம்மாளம்பூண்டி ஆகிய கிராமங்களில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று (ஜன.9) நடைபெற உள்ளது.
சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், பணியாளர்கள் ஒரு பகுதியினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்.9ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை செயலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், இரு தரப்பினரும் ஏற்று கொள்ளும் வகையில் சுமூக முடிவு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேலும், ரூ.9,000 சம்பள உயர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காலை 9 மணிக்கு பொங்கல் சிறப்பு ஸ்ருஷ்டி பஜார், கச்சபேஸ்வரர் கோவிலில் காலை 6:30 மணி மற்றும் மாலை 5 மணிக்கு திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு, காஞ்சிபுரம் ராஜ வீதியில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் மதியம் 12 மணிக்கும், ஏகாம்பரநாதர் கோவில் 16 கால் மண்டபம் அருகில் காலை 8:30 மணி, பகல் 12:30 மணி, இரவு 7 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
பிள்ளையார்பாளையம் முடங்கு வீதியில் உள்ள காயோரோகணீஸ்வரர் கோவிலில் காலை 8 மணிக்கும், புதுப்பாளையம் தெருவில் உள்ள ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கும், உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் காலை 7:30 மணிக்கும், திம்மராஜாம்பேட்டை பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கும், கன்னிகாபுரம் வேலாத்தம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று (ஜன.9) மாலை 6:30 மணிக்கும், டி.கே.நம்பி தெருவில் உள்ள திருமங்கையாழ்வார் மண்டபத்தில் மாலை 6:30 மணிக்கும், மேற்கு ராஜ வீதியில் உள்ள கோதண்டராமர் பஜனை கோவிலில் இரவு 7 மணிக்கும், ஒ.பி., குளம் தெருவில் உள்ள ஸ்ரீமன் ராமநாம பஜனை கூடத்தில் இரவு 7 மணிக்கும், குருவிமலை கிராமத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் இரவு 7 மணிக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக 4 ஒப்பந்த பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்களை https://kancheepuram.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை, ஜன.17 அன்றுடன் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.