India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் களியாம்பூண்டி பகுதியில் உத்திரமேரூர், நீரடி, வேடபாளையம், காரணி மண்டபம், களியாம்பூண்டி மேல்பாக்கம், திருப்பிலிவனம், மருதம், ஆண்டித்தாங்கல், மாகறல், ஆர்ப்பாக்கம், களக்காட்டூர் ராவத்தநல்லூர் கண்டிகை, ஆலத்தூர், உக்கல், கூழமந்தல், அத்தி, இளநீர் குன்றம் ஆகிய இடங்கள். மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.01.2025) நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார். உடன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மு.பிச்சாண்டி இருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களியாம்பூண்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் உத்திரமேரூர், நீரடி, வேடபாளையம், காரணிமண்டபம், மேல்பாக்கம், திருப்புலிவனம், மருதம், சிலாம்பாக்கம், ஆண்டிதாங்கல், களக்காட்டூர், இளையனார் வேலுார், காவாந்தண்டலம், காவாம்பயிர், கம்மராஜபுரம் சுற்றுப்புற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் இன்று (ஜன.26) காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிசெலவினம் குறித்து விவாதித்தல் மூலம் 2025-26ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படவும் உள்ளன. எனவே பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
கைத்தறி துணி நூல் இணை இயக்குனர் இன்று முதல் பட்டு கூட்டுறவு சங்கங்களில் நெசவு செய்து அளிக்கப்படும் உறுப்பினர்களுக்கு பணம் ரொக்கமாக தரப்படாது என்றும், அது வங்கி பரிவர்த்தனை மூலமே அளிக்கப்படும் என சுற்றறிக்கை அளிக்கப்பட்டு இன்று முதல் அதனை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பங்காரு அம்மன் காலனியில் உள்ள கைத்தறி துணி நூல் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நெசவாளர்கள் ஆர்பாட்டம்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்தூர், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில், சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி, நாளை குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? <
ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை, 3 நகல்களில் காஞ்சிரம் மாவட்ட ஆட்சியருக்கு 07.02.2025ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அறிக்கையினை சம்மந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று 20.02.2025 அன்று நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும்.
காஞ்சிபுரத்தில் உணவு, மரம், கட்டுமானம் உள்ளிட்ட 35 வகைப்பாடுகளின் கீழ், 3 ஆண்டுகளில் மட்டும் 12,438 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகரித்து இருப்பது, புள்ளியியல் துறை வெளியிட்ட ஆண்டறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது. கடந்த 2021 – 22ல், 10,771 தொழில் நிறுவனங்களும், 2022 – 23ல், 19,892 நிறுவனங்களும், 2023 – 24ல், 23,209 நிறுவனங்கள் பதிவு செய்து இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூரில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சத்யம் கிராண்ட் ரிசார்ட்யில் குறைதீா் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) நடைபெற உள்ளது. இந்த முகாமில், முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sorry, no posts matched your criteria.