India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள். <
சுங்குவார்சத்திரம், பாப்பாங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (72). இவர், நேற்று (பிப்.10) காலை அதே கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி (45) என்பவரது பைக்கில் லிப்ட் கேட்டு சென்றார். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சந்தவேலுார் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் சந்திரன் உயிரிழந்தார். மாசிலாமணி படுகாயமடைந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதிமுக நிர்வாகியும், பிரபல நடிகையுமான கௌதமி, நேற்று (பிப்.10) காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். பின்னர், அதிமுக நிர்வாகிகள் நடிகை கௌதமியை சந்தித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் அரசின் திட்டங்களை பெறுவதற்கு அடையாள எண்கள் வழங்கப்பட உள்ளதாகவும். இதற்காக கிராம பஞ்சாயத்துக்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பட்டா, சிட்டா, ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றை கொண்டு வந்து இம்முகாமில் பதிவு செய்து பயனடையலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம், வேளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவரது 3 வயது மகள் சவிக்ஷா, நேற்று முன்தினம் (பிப்.9) வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மாயமானார். வீட்டை சுற்றி குழந்தையின் பெற்றோர் தேடினர். அப்போது வீட்டருகே உள்ள குட்டை நீரில் மூழ்கியிருந்த சிறுமியை மீட்டனர். மருத்துவமனையில் சேர்த்தபோது சிறுமி உயிரிழந்தது தெரிந்தது. பொன்னேரிகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில் நேற்று (10.02.2025) நடைபெற்ற மூன்றாவது மாபெரும் புத்தக திருவிழா-2025 நிறைவு விழாவில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் வட்டம் பெருநகர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டுவதனாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தை மாசம் பிரமோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும் நிலையில், இந்தாண்டு 9ஆம் நாளான இன்று ராவணன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று (10.02.2025) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது மாபெரும் புத்தக திருவிழா-2025 நிறைவு விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், சான்றிதழ்கள் வழங்கி பின் அனைவரையும் பாராட்டினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், இன்று (10.02.2025) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், புதிய மின்னணு குடும்ப அட்டை வேண்டி அளித்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதிய மின்னணு குடும்ப அட்டையை, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று, பட்டு கூட்டுறவு சங்கங்களில் புதிய நடைமுறைப்படுத்தப்பட்ட கூலி வழங்கல் முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.