India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் வரை மெட்ரோ இயக்க வேண்டும் என காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பரந்தூர் வரை நீட்டிக்கப்பட உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை, பொன்னேரிக்கரை வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், காஞ்சிபுரத்திற்கு மெட்ரோ வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது. அவ்வாறு செய்தால் அனைத்து பயணிகளுக்கும் வரப்பிரசாதனமாக இருக்கும். பயணிகளுக்கு பயண நேரம் குறையும்.
காஞ்சிபுரத்தில் இன்று (பிப்.15) மின்பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை ஓரிக்கை, சின்ன காஞ்சிபுரம், தேனம்பாக்கம், ஐயன்பேட்டை, முத்தியால் பேட்டை, களக்காட்டூர், திருக்காலிமேடு, செவிலிமேடு, சங்கூசாபேட்டை, வல்லம், ஸ்ரீபெரும்புதூர், பால்நல்லூர், சிறுபாகல், ஏகனாம்பேட்டை, நெற்குன்றம், புத்தகரம், வாலாஜாபாத், பழையசீவரம், சித்தாலப்பாக்கத்தில் மின்தடை ஏற்படும்.
மதுரவாயல் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில், காஞ்சிபுரம் டி.எஸ்.பி. கலைச்செல்வம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். முத்திரை கட்டணம் குறைவாக பதிவு செய்து அரசுக்கு ரூ.1.34 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கு தொடர்பாக, சோதனை நடந்து வருகிறது. யாரும் வீட்டில் இல்லாத நிலையில் அவரது உறவினர்கள் முன்னிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.
சாம்சங் தொழிற்சாலையில் 3 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து தொடர்ந்து 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னையில் இன்று தொழிலாளர் நல ஆணையத்தில் நடைபெற்ற 3வது கட்டமாக நடைபெற்ற சாம்சங் பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தின் பணியிட நீக்கத்தை திரும்ப பெறாததால் உடன்பாடு ஏற்படவில்லை. இன்று மாலை காஞ்சிபுரத்தில் அடுத்த கட்ட தொடர் போராட்டங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் வேளாண் உழவர் நலத்துறை சார்பில், ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின்படி, மின்னணு முறையில் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆதார எண் போன்று தனித்துவமான அடையாள அட்டை எண் வழங்க, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலத்தின் பட்டா நகல், ஆதார், கைபேசி எண் போன்ற ஆவணங்களை கொடுத்து விவசாயிகள் பயனடையலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
பழைய சீவரம், ஓரிக்கை துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.15) மின்பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன் காரணமாக, காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பழையசீவரம், வாலாஜாபாத், தென்னேரி, ஊத்துக்காடு, நெற்குன்றம், தேவரியம்பாக்கம், சின்ன காஞ்சிபுரம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், திருக்காலிமேடு, ஓரிக்கை, கலெக்டர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்திலிருந்து (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஏனாத்தூரில் உள்ள கால்நடை பயிற்சி மையத்தில் (FTC) வியாழன் (பிப்.13) மகளிர் திட்டம் மூலமாக சமூக வளம் காக்கும் பயிற்றுனர்களுக்கு மூலிகை சாகுபடி பற்றி டாக்டர் பிரேமா வள்ளி அவர்கள் பயிற்சி அளித்தார். துளசி செடி, ஆடாதோடா, போன்ற மூலிகை செடி வகைகளைப் பற்றியும், மூலிகைகள் பயன்படுத்தும் முறை பற்றியும் பயிற்சிகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பயிற்சி வெள்ளி 14 அன்றும் நடைபெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்களை நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் நியமித்துள்ளார். அதன்படி மாவட்ட தலைவராக கே.ரஞ்சித் குமார், மாவட்ட செயலாளராக ஜ.பாஸ்கர், மாவட்ட பொருளாளராக அ.விஜய் பிரபு, மாவட்ட செய்தி தொடர்பாளர் மோ.கோபி ஆகியோரை நியமனம் செய்து பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து சிறப்பாக செயலாற்ற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.