Kanchipuram

News September 16, 2024

மது அருந்த வராததால் கத்தியால் வெட்டிய நண்பர்கள்

image

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் மகேஷ்(24), சாகுல், ஜெகதீஷ், ஜெகன் ஆகிய 4 பேரும் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இவர்களது நண்பர்கள் விஜய், செல்வகுமார் இருவரையும் மது அருந்த 4 பேரும் அழைத்தனர். அவர்கள் இருவரும் மது அருந்த வரவில்லை என கூறியதால், ஆத்திரமடைந்த 4 பேரும் விஜய் மற்றும் செல்வகுமாரை பீர் பாட்டிலால் தாக்கியதுடன் கத்தியால் வெட்டியுள்ளனர்.

News September 16, 2024

அண்ணா இல்ல வருகை பதிவேட்டில் உறுதியேற்ற அமைச்சர்

image

பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அண்ணா இல்லத்தில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வருகை பதிவேட்டில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சி அமைக்க திமுகவினர் இணைந்து உழைத்திடுவோம் என எழுதினார். இதனை திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.

News September 16, 2024

காஞ்சியில் அதிமுக பொதுக் கூட்டம்

image

அறிஞர் அண்ணா 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேஷன், மகளிர் அணி செயலாளர் பா வளர்மதி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் திரளான கட்சிப் தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

News September 15, 2024

பீர் பாட்டிலால் அடித்து கத்தியால் வெட்டிய சம்பவம்: 4 பேர் கைது

image

நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வம்(24), விஜய்(24) இருவரும், நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த ஜெகன்(23), ஜெகதீஷ்(22), சாகுல்(23), மகேஷ்(24) ஆகியோர் இருவரையும் வழிமறித்து மது குடிக்க அழைத்தனர். அதற்கு அவர்கள் மறுத்ததால், பீர் பாட்டிலால் தாக்கி, கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

News September 15, 2024

அதிமுகவை ஒன்றிணைக்காமல் ஓயமாட்டேன்: சசிகலா

image

அண்ணாவின் 116ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில், முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒன்றிணைக்கக் கூடிய பணிகள் சென்று கொண்டு இருக்கிறது. நிச்சயமாக தமிழக மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அதிமுகவை ஒன்றிணைக்காமல் ஓயமாட்டேன்” என்றார்.

News September 15, 2024

காஞ்சிபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் வேண்டுகோள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் லிங்கேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. அவர் கூறியதாவது, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் தங்களது விண்ணப்பங்களுக்கான தெளிவுரையை, நேரடியாகவோ தொலைபேசி, இணையவழி வாயிலாகவோ சரி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

News September 15, 2024

காஞ்சிபுரத்தில் குரூப் 2 தேர்வில் 3,979 பேர் ஆப்சென்ட்

image

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று நடத்திய குரூப் 2, 2ஏ தேர்விற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17,944 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 45 தேர்வு மையங்களில் 65 அறைகளில் குருப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. இதில், 13,965 பேர் தேர்வு எழுதினர். மீதம், 3,979 பேர் தேர்வு எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

News September 15, 2024

காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு

image

வரும் 17ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் (Tasmac Shops) உள்ள FL1, FL2, FL3, மற்றும் FL3A, FL4A ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.

News September 15, 2024

இன்று அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

image

பேரறிஞர் அண்ணாவின் 116ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, இன்று அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே காந்தி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி சிறப்புரை ஆற்ற உள்ளார். இதில், அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

News September 14, 2024

சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு என்ன காரணம்?

image

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனம், சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ளது. 2007இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில், கடந்த ஜூன் மாதம் சி.ஐ.டி.யூ சார்பில் சாம்சங் இந்தியா தொழிலாளர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கான அங்கீகாரக் கடிதம் கேட்டு தொழிற்சாலை நிர்வாகத்தை அணுகியபோது, ஏராளமான பிரச்னைகள் வந்ததாலேயே போராட்டம் நடத்துவதாக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறினார்.

error: Content is protected !!