India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் எல்லைக்குட்பட்ட மின் நகர் பகுதியில் வீட்டினுள் இருந்த வெளிநாட்டு ஆந்தையை மீட்டனர். ஆந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டதால் உடனடியாக கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்தவுடன் வெளிநாட்டு ஆந்தையை வனத்துறையிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

காஞ்சிபுரம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபரா நீங்கள்..? நமது மாவட்டத்தில் உள்ள சிப்காட்டில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு 8ஆவது பாஸ் செய்திருந்தாலே போதும். அரசு தரும் இலவச பயிற்சியில் சேர்ந்து பயின்று, வேலையில் சேரலாம். இதற்கு ஊக்கத் தொகையும் உண்டு. விருப்பமுள்ளவர்கள் <

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள 50 ‘Data Entry Operator’ காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.24,356 சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்திருந்தாலே போதுமானது, விண்ணப்பிக்க ஜன.13ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <

காஞ்சிபுரம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்த பத்மநாபன்(58) என்பவர் விபத்து வழக்குகளில் வாதாடி, காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நடந்த வழக்கில், விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, வாகன விபத்து வழக்குகளில் மோசடியில் ஈடுபட்ட பத்மநாபனை நேற்று(ஜன.9) கைது செய்தனர்.

படப்பை அருகே 2 நாட்களுக்கு முன்பு மது குடித்து கொண்டிருந்த நண்பர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரில், பிரகாச்ஜ்(35), ராம்குமார்(28), முருகன்(24), அருண்(35), குபேந்திரன்(27), மேகநாதன்(30), விக்னேஷ்(25), சரத்(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், விக்னேஷ் என்பவருக்கு தலையில்காயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ்(21), அன்பரசன்(23), சிவதாஸ்(44) ஆகியோரை கடந்த 2018ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கில் நேற்று முன் தினம் தங்கராஜிற்கு 7 ஆண்டு சிறை, ரூ.11 ஆயிரம் அபராதம், அன்பரசன் மற்றும் சிவதாஸ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை, ரூ.5,500 அபராதம் விதித்து போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுப் பூங்காவில் நாள் ஒன்றுக்கு ஒரு பரதநாட்டியம், 3 நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய 2 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 100க்கும் மேற்பட்ட கலைஞர்களால் வண்ணமையமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்தார்.

Sorry, no posts matched your criteria.