India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, LIC இணையதளத்தை இந்தி மொழியில் மாற்றம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பாஜக வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறது என்றும், இது கண்டிக்கத்தக்கது என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், இணையதளத்தை ஆங்கிலத்தில் மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் திரிக்க்ஷன் (47). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், சுங்குவார்சத்திரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி நேற்று அரசு பேருந்து இயக்கிச் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. பேருந்தை சாதுரியமாக நிறுத்தி, 45 பயணிகளின் உயிரை காப்பாற்றினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தில், கலை பண்பாட்டுத் துறை விருது வழங்கப்பட உள்ளது. ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்கள், தங்களது கலைப் படைப்புகளை தன் விபரக்குறிப்புடனும், படைப்புகளின் எண்ணிக்கை விவரங்களுடனும், உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், சதாவரம், (காது கேளாதோர் அரசு உயர் நிலைப் பள்ளி அருகில்), ஓரிக்கை அஞ்சல் என்ற முகவரிக்கு வரும் டிச.2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குன்றத்தூர், நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த மனோகரன், கடந்த 17ஆம் தேதி தன்னுடைய மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இந்த அனுபவத்தை தன்னுடைய வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து, எழுச்சூர் வட்டார மருத்துவ அலுவலர் அப்துல் ஜலீல் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம் என்ற வாட்ஸ் ஆப் குழுவில் மொத்தம் 1024 பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கஞ்சா கடத்திய வழக்கில், A+ ரவுடி உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். செங்கழுநீரோடை பகுதியைச் சேர்ந்த வசா என்கிற வசந்த் A+ ரவுடி ஆவார். இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 20 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தனது கூட்டாளிகளுடன் சென்னையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தபோது காஞ்சிபுரம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பிச்சவாக்கதில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலையின் கீழ் இயங்கி வரும் மாநில தென்னை கன்று பண்ணையில் குட்டை ரக தென்னங்கன்றுகள் ரூ.125 க்கு கிடைக்கும் என்றும், தேவைப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தோட்டக்கலை அதிகாரிகள் செல்வி நந்தினி 8940235542 மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ் 9994611566 அவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர்.அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ரூ.5.80 லட்சம் விருது தொகை. 2025ஆம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று விருது வழங்கப்படுகிறது. விருது பெற விரும்புவோர், விண்ணப்பத்தை www.tn.gov.in/ta/forms/1 இணையதளத்தில் (அ) காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் நேரில் பெறலாம் என அறிவிப்பு.
பரந்தூர் சுற்றியுள்ள கிராமங்களை இணைத்து புதிய விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவி திவ்யா கணபதி, நேற்று மாலை, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய சுங்குவாசத்திரம் போலீசார், தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ரூ.1792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது. ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3.55 லட்சம் சதுர அடியாக உள்ள கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி, போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள செங்கழுநீரோடை வீதியைச் சேர்ந்த வசந்த் (28), காமராஜர் நகரைச் சேர்ந்த அருண்பாண்டியன் (28), சிகாமணி (30) ஆகிய 3 ரவுடிகளையும் பிடித்து, ரூ.15,000 மதிப்பிலான 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.