India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றி வந்த 12 வருவாய் வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக இருந்த கமலக்கண்ணன் கல்வராயன்மலை வருவாய் வட்டாட்சியராக என 12 வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஆட்சியர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியாய விலை கடையில் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து உள்ளது. ரத்த சோகையை தடுப்பதாகவும், இதனால் பொது விநியோகத்திட்ட அரிசியினை வாங்கி பயன்படுத்தலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உள்ளதால் யாரும் ஆற்றின் பக்கம் வேடிக்கை பார்க்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலமாக இன்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தின் வதந்திகளை நம்ப வேண்டாம். நியாய விலை கடையில் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து ரத்த சோகையை தடுப்பதாகவும், இதனால் பொது விநியோகத்திட்ட அரிசியினை வாங்கி பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (25.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் பெய்த கனமழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த நிவாரண உதவித்தொகை ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., இன்று (அக்.25) வழங்கினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்க 2024 – 2025 ஆம் ஆண்டு பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டங்களின் மூலமாக பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் உபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்யவும் புதிய முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை நியமனம் செய்யவும், விற்பனை பிரதிநிதி 2 நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (24.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசக்தி என்பவர் 14 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து 8 மாதம் கர்ப்பமாக்கியது தொடர்பாக 09.09.2024-ந் தேதி சிறுமியின் தாயார் கொடுத்த புகார் மனு மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவுசெய்து கைது செய்த நிலையில் இன்று அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.