India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாண்டலம் கிராமத்தைச் சார்ந்தவர் இளங்கோவன். இவர் கடந்த 2 வருட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வலிதாங்க முடியாமல், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை: புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (40). இவர், நேற்று முன்தினம் எலவனா சூர்கோட்டையில் இருந்து புகைப்பட்டி நோக்கி பைக்கில் புறப்பட்டார். எலவனாசூர்கோட்டை – திருக்கோவிலூர் சாலையில் சென்றபோது, அவ்வழியாக எதிரே வந்த மினிலாரி ராஜா ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.24) இரவு முதல் நாளை (பிப்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.24) இரவு முதல் நாளை (பிப்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <

கள்ளக்குறிச்சியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <

கள்ளக்குறிச்சி வாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த லிங்கில்<

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாத் அறிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்திற்கு விவசாயிகள் கூட்டம் வரும் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க!

உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது. மடப்பட்டு மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த நெல் அறுவை இயந்திரத்தின் மீது, பின்னால் வந்த ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த மோதலின் தாக்கத்தால் நெல் அறுவை இயந்திரம் சாலையின் நடுவே கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.