Kallakurichi

News February 26, 2026

கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.25) இரவு முதல் நாளை (பிப்.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 26, 2026

தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆட்சியர் ஆலோசனை

image

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டார்.

News February 25, 2026

ஆட்சியரிடம் லோக் ஜன சக்தி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நேரில் மனு

image

வீரசோழபுரம் பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி மற்றும் ஊராட்சி அனைத்து ஊர்களிலும் கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும். கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை லோக் ஜன சக்தி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஓவியர் ஆனந்த் ஆட்சியரிடம் இன்று (பிப்.25) வழங்கினர்.

News February 25, 2026

கள்ளக்குறிச்சியில் திருமண வரம் அருளும் அற்புத கோயில்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் அமைந்துள்ளது பக்தஜனேஸ்வரர் கோயில். கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயிலில் மூலவராக பக்தஜனேசுவரர் உள்ளார். இந்த ஆலயத்தில் வைத்து தேவியை, சிவபெருமான் மணமுடித்ததாக நம்பப்படுவதால், இங்கு செவ்வாய், வெள்ளி தோறும் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் வந்து திரிசனம் செய்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 25, 2026

பத்து வட்டாட்சியர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்

image

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 10 வட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி கல்வராயன் மலை தனி வட்டாட்சியராக காதர் அலி என்பவரும், உளுந்தூர்பேட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக கமலக்கண்ணன் என 10 பேரை அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News February 25, 2026

கள்ளக்குறிச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News February 25, 2026

பொதுத் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 2026 சட்டப்பேரவை பொது தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த வகுப்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் தலைமையில் பிப்.25-ஆம் தேதி அன்று நடைபெற்றது.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா மற்றும் அரசின் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News February 25, 2026

கள்ளக்குறிச்சி: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 25, 2026

கள்ளக்குறிச்சி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். விழுப்புரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News February 25, 2026

கள்ளக்குறிச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு<> கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!