Kallakurichi

News June 1, 2024

உளுந்தூர்பேட்டையில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்

image

உளுந்தூர்பேட்டையில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஜூன்.01) நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் முதல்வர் கருணாநிதி 101 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடத்துவது குறித்து எம்எல்ஏ மணிக்கண்ணன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ் , மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 1, 2024

லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்து

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் கிராசிங் ரோடு அருகே சென்னையில் இருந்து சேலம் நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த லாரிக்கு பின்னால் சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து லாரியை முந்தி செல்ல முயன்ற போது லாரியின் பின்பக்கத்தில் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் தனியார் ஆம்னி பேருந்தின் டிரைவரின் இரண்டு கால்களும் நசுங்கியது.

News May 31, 2024

சாலை விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சியில் இருந்து கூத்தக்குடி நோக்கி நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பல் மருத்துவர் கோகுல் என்பவர் கூத்தக்குடி தற்காலிக போலீஸ் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பல் மருத்துவர் கோகுல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 30, 2024

வண்ண மின் விளக்குகளால் மிளிரும் ஆட்சியர் அலுவலகம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக திசு பன்முக கடினமாதல் (MULTIBLE SCLEROSIS DAY) 31.05.2024 நாளினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்திற்கிணங்க திசு பன்முக கடினமாதல் நோய் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் இன்று மின் விளக்குகளால் ஒளிர்கிறது.

News May 30, 2024

கள்ளக்குறிச்சி தியாகதுர்க்கம் மலை சிறப்பு!

image

கள்ளக்குறிச்சியில் உள்ள தியாகதுர்க்கத்தில் அமைந்துள்ளது இந்த தியாகதுர்க்கம் மலைக்குன்று. இம்மலையில் குகைகள், சுனைநீர் கிணறு உள்ளது. இதன்மேல் ஒரு கோட்டையும் அமைந்துள்ளது. இது கி.பி 1760 முதல் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டே ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். பின் திப்பு சுல்தான் இதை மீட்க போர் புரிந்தார். பின் ஆங்கிலேய ஆட்சி நிலையானதும் இக்கோட்டைராணுவத் தளங்களாகச் செயல்பட்டது.

News May 28, 2024

கள்ளக்குறிச்சி:  இலவச பயிற்சி வகுப்புகள்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை டிஎன்பிசி குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் கார்டுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தை அணுக வேண்டும் என ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

கள்ளக்குறிச்சியின் பெரியார் அருவி சிறப்புகள்!

image

கள்ளக்குறிச்சியில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சி கோமுகி அணைக்கு அருகில் அமைந்துள்ளது. பெரும்பான்மையான நாட்களில் குறைந்த அளவே நீரின் அளவு இருக்கும். மழை பருவ காலங்களில் நீரின் வீழ்ச்சி அளவு மிகவும் அதிகமாக இருக்கும். விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் பருவ காலங்களில் இங்கு வருகை புரிகின்றன. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, இதன் சீசன் காலமாகும்.

News May 27, 2024

கள்ளக்குறிச்சியில் நடந்த திமுக செயற்குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களை நடத்துவது மற்றும் கட்சியின் ஆக்கபூர்வமான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News May 27, 2024

தியாகதுருகம் பகுதியில் குரங்குகளால் மக்கள் அவதி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. வீடுகள், கடைகளுக்குள் புகும் குரங்குகள் உணவு பொருட்களை சூறையாடி செல்வதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சாலையில் செல்லும் மக்களை கடிக்கவும் பாய்கின்றன. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து காப்புக் காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 26, 2024

சின்னசேலம் அருகே 4 நாட்கள் நின்று செல்லும் ரயில்

image

மேல்நாரியப்பனூரில் புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா ஜூன் 11 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பெருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் சேலம்-சென்னை எழும்பூருக்கு அதிவிரைவு ரயில் வண்டி ஆனது மேல்நாரியப்பனூர் ரயில்வே நிலையத்தில் ஜூன் 11,12,13,14 ஆகிய தேதிகளில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.