India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த புது பல்லக்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் நேற்று இரவு மணிமுக்தா நதி கரையில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு வயல்வெளிக்கு நீர் இறைப்பதற்காக வைத்திருந்த மின் மோட்டாரில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை <

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
1). சின்னசேலம் – 7402606430, 7402606431
2). கள்ளக்குறிச்சி – 7402606425, 7402606426
3). கல்வராயன்மலை – 7402606450
4). சங்கராபுரம் – 7402606440, 7402606441
5). ரிஷிவந்தியம் – 7402606435, 7402606436
6). திருக்கோவிலூர் – 7402606339

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சங்கராபுரம் வடக்கு ஒன்றியம், உலகளப் பாடி ஊராட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள், ரிஷிவந்தியம் சட்டமன்றம் உறுப்பினர் வசந்தம். கார்த்திகேயன் தலைமையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார் இருந்தார்.

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அடுத்த குடியநல்லூரில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அதில் பணியாற்றி வரும் பாபு என்கிற ஆசிரியர் அப்பள்ளியைச் சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரை மணாலன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், ஆசிரியர் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். மேலும் இந்த கோயில் வந்து தரிசித்தால் திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் தோஷங்கள் தீரும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
Sorry, no posts matched your criteria.