Kallakurichi

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

+2 பொதுத்தேர்வு – மகிழ்ச்சியுடன் மாணவர்கள் கூறிய பதில்!

image

தமிழகம் முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றன. மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களிடம் கேட்டபோது, வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்புள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அனைத்துத் தேர்வு மையங்களிலும் காவல்துறைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

News March 2, 2026

+2 பொதுத்தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

தமிழக முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வு தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: திக்குமுக்காடும் சைபர் க்ரைம் போலீசார்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் வடமாநிலங்களை சேர்ந்த கும்பல்கள், புது புது டெக்னிக்கில் சைபர் குற்றங்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் பிரிவில் மொத்தமே 5 காவலர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் சைபர் க்ரைம் பிரிவு திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிநவீன வசதிகளுடன் கூடிய சைபர் பிரிவு தேவை என கோரிக்கை எழுந்துள்ளது.

News March 2, 2026

சங்கராபுரத்தில் அதிரடி கைது!

image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இளங்கோவன் மனைவி அஞ்சலை என்பவர் மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 1, 2026

கள்ளக்குறிச்சி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதள<>ங்களில்<<>> விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க

News March 1, 2026

கள்ளக்குறிச்சி: மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

image

1.காவல் கட்டுப்பாட்டு அறை – 100, 2.தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, 3.இலவச தாய், சேய் ஊர்தி – 102, 4.போக்குவரத்து காவலர் – 103, 5.விபத்து உதவி எண் – 108, 6.பேரிடர் கால உதவி – 1077, 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098, 8.பெண்கள் பாதுகாப்பு – 181, 9.கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, 10.ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, 11.கண் வங்கி – 1919, 11.எரிவாயு – 1716, 12.BSNL – 199. ஷேர் பண்ணுங்க.

News March 1, 2026

கள்ளக்குறிச்சி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebhara<>tgas.com<<>>
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க.SHARE

error: Content is protected !!