India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி உழவர் சந்தை துணை மேலாண்மை அலுவலர் இசைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த போகி பண்டிகை அன்று 29 ஆயிரத்து 702 டன் மற்றும் 15ம் தேதி 29 ஆயிரத்து 739 டன் என மொத்தம் 48 லட்சத்து 66 ஆயிரத்து 161 ரூபாய்க்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையாகி உள்ளன என தெரிவித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த லட்சியம் கிராமம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர்கள் மணிபாரதி -ராஜவள்ளி தம்பதியினர். இவர்களது மகன் ஹரிகரன் (16) அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்த நண்பர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மற்றும் எடுத்தவாய் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜன.18) மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக (நாளை) ஜனவரி 18ஆம் தேதி அன்று மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாகவும் நாளை வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியம், வேங்கூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் திருக்கோவிலூர்-ஆசனூர் சாலை இருவழிப்பாதை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணியினை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நாளை(18.01.2025) காலை 10:30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு தலைமையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர்பாக பல்வேறு விதமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை 18.1.2025 அன்று பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கள்ளக்குறிச்சி, ஏமாப்பேர், நீலமங்கலம், க. அலம்பலம், சடையம்பட்டு, மட்டிகைகுறிச்சி, சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், ரோடுமாமாந்தூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கள்ளக்குறிச்சி மின்துறை செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் இன்று தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் விதமாக அவருடைய திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செங்குறிச்சியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன்பேரில், உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியபோது அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் சோதனை செய்த போது, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. பின் கணேசனை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.